கூந்தல் கருகருவென மென்மையாக உதவும் கரிசலாங்கண்ணி!

2 July 2021, 10:08 pm
simple home remedy to get black hair using an oil
Quick Share

இந்த காணொளியில் நாம் வெள்ளை கரிசலாங்கன்னி செடியை பற்றி தான் பார்க்க போகிறோம். கரிசலாங்கன்னியில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு மற்றும் நீலம் என்று நான்கு வகைகள் உண்டு. இதில் நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள கரிசலாங்கன்னி முழுவதுமாக அழிந்து விட்டதாக கூறுகிறார்கள். மஞ்சள் நிற கரிசலாங்கன்னி ஓரளவிற்கு அங்கும் இங்கும் பார்க்க முடிகிறது. ஆனால் அதிக அளவில் காணப்படுவது வெள்ளை நிற கரிசலாங்கன்னி செடி தான்.

மஞ்சள் நிற கரிசலாங்கன்னி செடிக்கு மருத்துவ தன்மை அதிகம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் வெள்ளை வண்ண கரிசலாங்கன்னி செடிக்கும் ஓரளவிற்கு மருத்துவ குணங்கள் உண்டு. இந்த கரிசலாங்கண்ணி செடியை கர்ப மூலிகை என்று சொல்லுவார்கள். அதாவது வயதான தோற்றத்தை குறைத்து இளமையைக் கொடுக்கக் கூடிய மூலிகை என்று அர்த்தம். 

கரிசலாங்கன்னியை அவ்வப்போது நாம் உள்ளுக்குள் எடுத்து வரும்போது அதிகப்படியான நன்மைகள் நமக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். வயதான தோற்றம் குறையும். பலருக்கு இருக்கும் சந்தேகமாவது கரிசலாங்கன்னி செடியை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான். 

இதனை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். கரிசலாங்கன்னி செடியின் இலையை எடுத்து கையில் கசக்கி பார்க்கும் போது அந்த சாறு கைகளை கருப்பு வண்ணமாக மாற ஆரம்பித்து விடும். இந்த காரணத்தால் தான் கரிசலாங்கன்னியை முடி வளர்ச்சி மற்றும் இளநரைக்கு பயன்படுத்தி வருகிறோம். 

தலைமுடி வளர்ச்சியை தூண்டும் கரிசலாங்கன்னி எண்ணெயை நாமே வீட்டிலும் தயாரிக்கலாம். அதற்கு தேங்காய் எண்ணெயோடு கரிசலாங்கன்னி இலையை கொதிக்க வைத்து வடிகட்டி அதனை தலைமுடிக்கு தடவி வரலாம். இந்த எண்ணெய் முடியை கருமையாக்குவதோடு, முடி வளர்ச்சியையும் தூண்டும். 

அல்லது தேங்காய் எண்ணெய்க்கு சமமான கரிசலாங்கண்ணி சாறு எடுத்து அதனை காய்ச்சியும் பயன்படுத்தலாம். இவ்வாறு நாம் கரிசலாங்கண்ணி எண்ணெயை பயன்படுத்தி வரும்போது அது தலைமுடிக்கு மட்டும் நன்மை ஏற்படுத்தாமல் கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதாக அமையும். மேலும் கண்பார்வையை கூர்மையாக்கவும் செய்கிறது.

தலைவலி மற்றும் காய்ச்சல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும். வெளிப்புறத்தில் இதனை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோமோ அதே அளவு அதனை உட்கொண்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கரிசலாங்கன்னியை கீரையாகவும் செய்து கொள்ளலாம் அல்லது அதனை அரைத்து உருண்டையாக்கி பால் அல்லது மோரில் கலந்தும் உட்கொள்ளலாம். 

இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வைத் தரும். இரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் அளவை அதிகரித்து தரும். கல்லீரல் மற்றும் மண்ணீரலில் படிந்து இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் தன்மை இந்த கரிசலாங்கன்னிக்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் செய்கிறது. 

அதனால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்து கொள்ளலாம். மலச்சிக்கல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்களும் இதனை எடுத்து கொள்ளலாம். கரிசலாங்கன்னி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் தோல் பிரச்சனைகளும் குணமாகும். மேலும் சருமம் பளபளப்பாகும். 

Views: - 322

1

0