அசிடிட்டி பிரச்சினை வாட்டி வதைக்குதா… உங்களுக்கான சில ஈசி டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
30 November 2021, 10:23 am
Quick Share

உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் சாப்பிடுவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது ஆகியவை அமிலத்தன்மை உட்பட பல செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் ஒரு மருந்தைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அற்புதங்களைச் செய்யக்கூடிய சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது இன்னும் எளிது.

அமிலத்தன்மை அல்லது அமில ரிஃப்ளக்ஸ் என்பது பலரை பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. இளைஞர்கள் அசிடிட்டியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால், அசிடிட்டியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலை மார்பின் கீழ் பகுதியில் உணரப்படும் நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று அமிலம் உணவுக் குழாயில் மீண்டும் பாய்வதால் ஏற்படும் புளிப்பால் அடையாளம் காணப்படுகிறது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் சமையலறையில் அமிலத்தன்மைக்கான எளிதான தீர்வுகள் உள்ளன.
இரவு முழுவதும் ஊற வைத்த திராட்சை:
ஐந்து திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

●ஒரு கிளாஸ் மோர்:
மோர் உங்கள் அமிலத்தன்மை அளவைக் குறைக்க உதவும்.

●மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட பானம்:
தேவையான பொருட்கள்: நசுக்கப்பட்ட கருப்பு ஏலக்காய், கருப்பு மிளகு, கிராம்பு, மஞ்சள், துளசி இலைகள் மற்றும் தண்ணீர்.

செய்முறை: அனைத்து பொருட்களையும் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியானதும் வடிகட்டி சூடாக பருகவும்.

●குல்கந்த்:
குல்கந்தை தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.

உதவக்கூடிய வேறு சில குறிப்புகள்:-
*உணவுக்கு இடையில் அதிக இடைவெளி இருத்தல் கூடாது.
* இரவு உணவைத் தவிர்த்தல்.
*உணவு சாப்பிட்ட உடனேயே படுக்கக் கூடாது.
*தூங்கும் போது தலையை உயர்த்தி வைத்திருத்தல்.

Views: - 244

0

0