சாக்ஸில் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா… இதோ உங்களுக்கான டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
5 February 2023, 7:08 pm
Quick Share

எப்போதும் சாக்ஸ் அணியும் பழக்கம் இல்லாதவர்கள் கூட குளிர்கால நாட்களில் சாக்ஸ் அணிவார்கள். குளிர்காலத்தில் பாத வெடிப்பு பிரச்சனையும் அதிகரிக்கும். அதனால்தான் பெரும்பாலான மக்கள் சாக்ஸ் அணிய விரும்புகிறார்கள். சாக்ஸ் அணிவதால் பலருக்கு காலில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இது பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

மருத்துவத்தில், இது புரோமோடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. காலுறைகளில் உள்ள பாக்டீரியாக்கள் கால்களில் உள்ள வியர்வையுடன் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதிலிருந்து விடுபட உதவும் சில டிப்ஸ்:-

1. உங்கள் கொஞ்சமாக அல்லது அதிகமாக வியர்த்தாலும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும், வியர்வை துர்நாற்றத்தைத் தடுக்கவும் காட்டன் சாக்ஸைப் பயன்படுத்துங்கள். ஏனெனில், செயற்கை சாக்ஸ் அதிகமாக வியர்க்கும்.

2. உணவை மாற்றவும். மிகவும் காரமான உணவு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. அஜீரணம் அல்லது அமிலத்தன்மை இருந்தால், வியர்வையின் வாசனை மிகவும் விரும்பத்தகாததாக மாறும்.

3. நீங்கள் டீ மற்றும் காபிக்கு அடிமையாக இருந்தால், அதைத் தவிர்க்கவும். எந்தவொரு தூண்டுதல் பானமும் உடலில் ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது. இது மறைமுகமாக நரம்புகளை உற்சாகப்படுத்துகிறது. இதன் விளைவாக, உங்களுக்கு அடிக்கடி வியர்க்கும்.

4. காலணிகளை அவ்வப்போது வெயிலில் வைக்கவும். ஒளியும் காற்றும் ஷூவிற்குள் சென்றடையும் போது, பூஞ்சை மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் தாக்கம் குறைகிறது. ஒரே காலுறைகளை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பலருக்கு இந்த தவறை செய்கின்றனர். இது சரியன்று.

5. சாக்ஸ் அணிந்தவுடன் கால்கள் வியர்த்து விடுபவர்கள், வீட்டை விட்டு வெளியேறும் முன் 15 நிமிடம் கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும். உப்பு பூஞ்சையைத் தடுக்கும். இதனால் கால் வியர்வை பிரச்சனை வெகுவாக குறைகிறது.

Views: - 87

0

0