நிறைய விஷயங்களை செய்யணும்னு நினைச்சு மறந்து போயிடுறீங்களா? இதை படிங்க! கவலைய விடுங்க!

6 June 2021, 12:18 pm
how to get out of memory loss problem
Quick Share

மறதி என்பது இயல்பான ஒரு விஷயம் தான். அது வரம் என்றும் சொல்லலாம் சாபம் என்றும் சொல்லலாம். மறதி இருந்தால் தான் மனிதனால் மேலும் அவன் வாழ்க்கையை தொடர முடியும். கெட்டதை மறந்து நல்லதை நினைவில் கொண்டு வாழ்பவர்கள் பெரும்பாலும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பர். ஆனால் எல்லாவற்றையும் மறந்துவிடுவது ஆபத்தான ஒன்று தான்.

மறதியே ஒரு வியாதி ஆனவர்கள் கூட இருக்கிறார்கள். சாதாரணமாக சாவியை எங்கோ வைத்துவிட்டு தேடுவது கூட மறதி பிரச்சினை. ஆனால் ஆரம்பத்திலேயே அதை குணப்படுத்திக்கொண்டால் அது பெரிய பிரச்சினை இல்லை. அதுவே தொடர்ந்து இருக்கும்பட்சத்தில் மறதி தீவிர வியாதியாகி பல பிரச்சனைகளை கொண்டு வரக்கூடும். 

இதை கண்டிப்பாக நம்மால் சரி செய்ய முடியும். நம் ஞாபக சக்தியை அதிகரிக்க பச்சை காய்கறிகள், பழ வகைகள், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கீரை உணவுகள்

கீரைகளை பச்சையாக வாங்கி சமைத்து சாப்பிடுவது நலம். அதை விட்டு விட்டு கீரை பொடிகளை கடைகளில் வாங்கி உபயோகப்படுத்துவது முழு பலனை அளிக்காது. வல்லாரை கீரை போன்ற கீரை வகைகளை வாரம் இரு முறையேனும் சமைத்து சாப்பிடலாம். அதே போல் பர்கர், பீட்ஸா, பானி பூரி போன்ற ஜன்க் ஃபுட் என்று சொல்லப்படுகின்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள். ஆசைக்காக அவ்வப்போது ஒன்று சாப்பிடுவதில் தவறெதுவும் இல்லை. ஆனால் சிலர் இதையே உணவாக எண்ணி உண்டு வருவார்கள். அவர்கள் இதனை கண்டிப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நல்லதை நினைவு கொள்க

உங்களுக்கு பிடித்த விஷயங்களை மனதில் நினைவு கொள்ளுங்கள். தேவை இல்லாத, உங்களை கோபப்படுத்தக் கூடிய விஷயங்களில் இருந்து வெளியே வர முயற்சி செய்யுங்கள். பிடித்தவற்றை மிக சுலபமாக நம் நினைவில் வைத்து கொள்ள முடியும். அதனால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள்.

நல்ல தூக்கம்

அடுத்து உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் மற்றும் ஓய்வு கிடைக்கிறதா என்பதை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சரியான அளவு தூக்கம் இருந்தால் மட்டுமே நம் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ஓய்வு கிடைத்து அடுத்த நாள் நாம் எழும் போது புத்துணர்ச்சி கிடைக்கும். 

ஈடுபாடு

எதை செய்தாலும் ஆர்வத்தோடு செய்து பாருங்கள். கண்டிப்பாக அந்த விஷயத்தை நீங்கள் நன்றாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருக்கலாம், அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக இருக்கலாம், மாணவராக இருக்கலாம்…. இப்படி எந்த பொறுப்பில் நீங்கள் இருந்தாலும் செய்யும் வேலையை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம்.

Views: - 205

1

0