குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கத்தை மறக்க செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்

6 July 2021, 5:53 pm
how to make children forget about finger sucking
Quick Share

சொல்லமுடியாத பயம் மற்றும் பதற்றத்தினால் குழந்தைகள் விரலைச் சப்ப ஆரம்பிக்கின்றனர். குழந்தைகள் வெளியில் அல்லது குப்பை பகுதியில் விளையாடிவிட்டு அப்படியே விரல் சூப்பும்போது அதனால் குழந்தைகளுக்கு பல பிரச்சினைகள், உடல் நலக்குறைபாடுகள் மற்றும் பல் தூக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே மறக்கச் செய்வது நல்லது. 

குழ்நதைகள் ஏன் விரல் சூப்பும் பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர் என்ற கேள்வி நம்மில் இருக்கலாம். விரல் சூப்புவதால் குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் குழந்தைகள் அழும்போது விரல் சப்ப விட்டால் அழுகையை நிறுத்திவிடுகின்றனர். 

தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் குழந்தைகள் விளையாடும்போது அவர்களின் கைகளில் தொற்றிக்கொள்ளக்கூடும். அது விரல் வழியே உடலுக்குள் இன்று உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் குழந்தை பருவத்தில் ஈறுகள் மென்மையாக இருக்கும் என்பதால் குழந்தை விரல் சப்பிக்கொண்டே இருந்தால் ஈறுகள் சேதமடையக்கூடும் மற்றும் இதனால் பற்களின் கட்டமைப்பு பார்க்க அழகில்லாமல் எக்குத்தப்பாக போகும். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து விரல் சப்பினா விரல்களின் எலும்புகளுக்கும் சேதம் ஏற்படும்.

ஆனால் குழந்தைகள் இந்த விரல் சூப்பும் பழக்கத்தை விட பெற்றோர்கள் பெரியோர்கள் என்ன செய்ய வேண்டும்? 

குழந்தைகளுக்கு பயம் ஏற்படாதவாறு பெற்றோர்கள் குழந்தையுடன் விளையாட வேண்டும். விரலை வாய் பக்கத்தில் எடுத்துச் செல்லும்போது கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். அடித்தால் கை சூப்பும் பழக்கம் மாறிவிடம் என்றெண்ணி அடிக்கவோ கையைத் தட்டிவிடவோ கூடாது. குழந்தைகள் உங்களையே கவனித்து இருக்கும்படி நல்ல சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லலாம். விரல் சப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கதைகள் மூலம் புரிய வைக்க வேண்டும். விரல் சப்பவில்லை என்றால் அவர்களைக் கைத்தட்டிப் புகழ வேண்டும்.

குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை பிடித்த வடிவத்தில் செய்துகொடுக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த நல்ல ஆரோக்கியமான மெல்லக்கூடிய உணவுகளைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் கை சூப்புவதை மறக்க செய்ய வேண்டும். 

விரல் சூப்பும் பழக்கம் கொஞ்சம் காலம் இல்லாமல் இருந்து மீண்டும் ஏற்பட்டால் அதற்கான காரணத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.  குழ்நதைகள் சந்தோசமாக மன அழுத்தம் இல்லாமல் தங்களுக்கு ஏற்ற சௌகரியாமான சூழலில் இருக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த கை சூப்பும் பழக்கத்தை குழ்நதைகள் கைவிட பெற்றோர் அல்லது வீட்டில் இருக்கும் பெரியோர்கள் குழந்தையைப் புரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Views: - 215

0

0