கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய தேநீர்!!!

Author: Hemalatha Ramkumar
7 February 2023, 10:13 am
Quick Share

பொதுவான நோய்களைக் கட்டுப்படுத்த எண்ணற்ற வீட்டு வைத்தியங்கள் உள்ளன. விஞ்ஞான ரீதியான சான்றுகள் இல்லாத காரணத்தால் அவற்றை நாம் முயற்சித்து பார்ப்பதே இல்லை. ஆனால் சில பழமையான குணப்படுத்தும் முறைகள் உடனடி நிவாரண விளைவுகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீட்டு வைத்தியங்களில் ஒன்று வெங்காய தேநீர்.

இந்த அறிவியல் ஆதரவு பெற்ற பானம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், இருமல், தொண்டை புண் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தருவதற்கும் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களின் விலைமதிப்பற்ற ஆதாரமாக வெங்காயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயம் நம் உணவில் சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மை பயக்கும் பண்புகளையும் அளிக்கிறது. வெங்காயத்தில் செய்யப்பட்ட ஒரு சூடான கப் தேநீர் மட்டுமே இந்த நன்மைகள் அனைத்தையும் உங்களுக்கு வழங்கி விடும். வெங்காய தேநீரை இரண்டு முறைகளில் செய்யலாம் – ஒன்று வெங்காயம் மற்றும் மற்றொன்று வெங்காயத் தோல்கள். வெங்காயத் தோல்கள் வெங்காயத்தைப் போலவே நன்மை பயக்கும்.

வெங்காயம் மற்றும் வெங்காயத் தோல் இரண்டையும் தேநீர் தயாரிக்க பயன்படுத்தலாம்.
வெங்காய தேநீர் செய்முறை:
ஒரு கடாயில் 1 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நறுக்கிய ஒரு வெங்காயம், 2-3 கருப்பு மிளகுத்தூள், 1 ஏலக்காய் மற்றும் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்க்கவும். கடாயை மூடி, சுமார் 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேநீரை வடிகட்டி, தேன் சேர்த்து சாப்பிடவும்.

Views: - 298

0

0