அருமையான முளைக்கட்டிய பச்சைப் பயறு குழம்பு செய்வது எப்படின்னு சொல்லித்தறோம் வாங்க!
Author: Hemalatha Ramkumar16 August 2021, 5:33 pm
முளைக்கட்டிய பயறு வகைகள் மிகவும் ஆரோக்கியமான உணவு என்பதால், இது பல ஆண்டுகளாக இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த முளைக்கட்டிய பச்சை பயறு புரதச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளில் முக்கியமான ஒன்றாகும்.
சாதாரணமாக பயறு வகைகளைச் சாப்பிடுவதை விட, அவை முளைக்கட்டிய பிறகு ஊட்டச்சத்து மதிப்பு கணிசமாக மேம்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பயறு முளைக்கும் போது புரத உள்ளடக்கம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் உள்ளடக்கம் அதிகரிக்கும்.
புதிய முளைக்கட்டிய பயறுகளை சாலட் போன்றவற்றிலும் நாம் சேர்த்து பயன்படுத்தலாம். பயிர்கள் முளைக்கட்டியதும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். முளைக்கட்டி இரண்டு நாட்களாகி விட்டால், அதை சமைத்து உட்கொள்வது நல்லது.
இதனால் உணவு விஷமாகும் பிரச்சினை என்பது இருக்காது. சரி முளைக்கட்டிய பச்சைப் பயறு குழம்பை எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சைப் பயறு – 1 கப்
- வெங்காயம் – 1
- பூண்டு – 2 கிராம்பு
- தக்காளி – 2
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- தேங்காய் பால் – 1/4 கப்
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு விதைகள் – 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 6-7
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- அடுத்து வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
- முளைகாட்டிய பயறு வகைகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- தக்காளியை ஒரு கூழ் போல செய்து சேர்க்கவும்.
- இந்த நிலையில் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.
- தக்காளி விழுது மற்றும் மசாலா நன்றாக சமைக்கும் வரை இதை இன்னும் 2-3 நிமிடங்கள் கலந்துவிடவும்.
- பாத்திரத்தில் மசாலா ஒட்டாமல் இருக்க கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
- தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய் பால் உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் தவிர்த்துக்கொள்ளலாம்.
- இப்போது, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளை தூவிவிட்டு அடுப்பை அனைத்து தட்டு வைத்து மூடி இறக்கிவிடவும்.
இதை உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து சுட சுட சாதாத்துடன் பிணைந்து சாப்பிடலாம். அவ்வளவு அருமையாக இருக்கும்! .
0
0