பச்சை பயிறு சிறந்த முறையில் முளைக்கட்ட என்ன செய்ய வேண்டும்???

Author: Hemalatha Ramkumar
9 October 2021, 11:46 am
Quick Share

முளைக்கட்டிய பச்சை பயிறு ஆரோக்கியமானது, ஆக்ஸிஜனேற்றிகளின் சக்தி மையம் மற்றும் தேவையற்ற பசி வேதனைகளைத் தடுக்க ஒரு சிறந்த வழியாகும். ஆனால் சில நேரங்களில், முளைக்கும் செயல்முறை, எளிதானது என்றாலும், ஒரு சிலருக்கு அது ஒழுங்காக முளைக்கட்டாது. உங்களுக்கும் இந்த பிரச்சினை இருந்தால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்! உங்களுக்கான சரியான தீர்வு இங்கு உள்ளது.

பச்சை பயிறு நார்ச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கார்போஹைட்ரேட்டுகள், ஃபோலேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. மேலும், செரிமானத்தை மேம்படுத்தவும், எடை இழப்புக்கு மற்றும் பலவற்றிற்கும் முளைக்கட்டிய பயிறு உதவும்.

முறை:-
*பச்சை பயிறை நன்கு கழுவவும்.
*அவற்றை மூன்று மணி தண்ணீரில் ஊற வைக்கவும்.
*தண்ணீரை வடிகட்டவும்.
*ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
*இதனை ஒரு சூடான இடத்தில் இரவு முழுவதும் வைக்கவும்.
*அடுத்த நாள் காலையில் பயிறு மிக அழகாக முளைக்கட்டி இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
*பாத்திரம் பதிலாக ஒரு காட்டன் துணியிலும் பயிறை கட்டி வைத்து முளைக்கட்ட விடலாம்.

முளைக்கட்டிய பயறுகள் எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அவை இதயத்திற்கு உதவுகின்றன, கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கின்றன, இரத்த சர்க்கரை, மற்றும் கர்ப்ப காலத்தில் கூட பயனுள்ளதாக இருக்கும்.

முளைக்கட்டிய பயறு பயன்கள்:-
*எளிதில் ஜீரணமாகக்கூடியது.
*வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகம் உள்ளது.
*அதிக அளவு புரதம்.
*சமையல் நேரத்தை குறைக்கிறது.
*கொழுப்பைக் குறைக்கிறது.
*உடலை சுத்தம் செய்கிறது.
*செரிமானத்தை மேம்படுத்துகிறது.

Views: - 475

0

0