பாடாய் படுத்தும் இருமலை போக்க இப்படி ஒரு டேஸ்டான ஜூஸ் இருக்குன்னு சொன்னா நிச்சயம் நீங்க நம்ப மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
12 October 2022, 9:36 am

ஒரு சிலருக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்தால் ஓரிரு நாட்கள் இருந்து விட்டு சென்றுவிடும். ஆனால் ஒரு சிலருக்கு என்ன தான் வைத்தியம் செய்தாலும் அவர்களை விட்டு செல்லாமல் பாடாய் படுத்தும். இதற்காக மருந்து, மாத்திரை, சிரப் என சாப்பிட வேண்டி இருக்கும். தற்போது இதற்கு ஒரு ​​இயற்கையான தீர்வு ஒன்று தெரிய வந்துள்ளது. சுவையான ஒரு பழச்சாறு மூலமாக இருமலை போக்குவது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இருமலை போக்க அன்னாசி பழச்சாறு செய்வதற்கான 3 வழிகள்:-

முறை 1: அன்னாசி பழச்சாறு மற்றும் தேன்

ஒரு பாத்திரத்தில் அரை கப் வெதுவெதுப்பான அன்னாசி பழச்சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்து சிறிது சூடு ஆறியதும் குடிக்கவும். தேன் மற்றும் அன்னாசி இரண்டும் உங்கள் தொண்டையை ஆற்றும் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

முறை 2: அன்னாசி பழச்சாறு, தேன், உப்பு மற்றும் மிளகு

ஒரு கப் அன்னாசி பழச்சாறு எடுத்து அதில் அரை டேபிள் ஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்க்கவும். இந்த அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.

முறை 3: அன்னாசி பழச்சாறு, தேன், இஞ்சி, மிளகு மற்றும் உப்பு

இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் பெற இது ஒரு பாரம்பரிய மருந்து. ஒரு கப் அன்னாசி பழச்சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 1 சிட்டிகை உப்பு, சிறிதளவு மிளகு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். தொண்டை வலியிலிருந்து விடுபட இதனை 1/4 அளவில் ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!