உங்கள் வீட்டிலேயே கேரளா ஸ்டைலில் உண்ணியப்பம் செய்யுறது எப்படின்னு இங்க தெரிஞ்சிக்கோங்க

By: Dhivagar
8 September 2021, 5:46 pm
how to make unniyappam at home
Quick Share

கேரள மாநிலத்தில் உண்ணியப்பம் மிகவும் பிரபலம். முக்கியமான விழாக்களின் போது மலையாள மக்கள் தங்கள் வீடுகளில் உண்ணியப்பம் செய்து இறைவனுக்குப் படைத்து வழிபடுவது வழக்கம். வாழைப்பழம், அரிசி மாவு மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி இந்த பணியாரம் செய்யப்படுகிறது. கொட்டாரக்கரை மகாகணபதி கோவிலில் முக்கிய நிவேத்தியம் ஆக இந்த உண்ணியப்பம் தான் வழங்கப்படும்.

தேவையான பொருட்கள்

 • அரிசி மாவு – 1 கப்
 • கோதுமை மாவு – 2 டீஸ்பூன்
 • பழுத்த வாழைப்பழம் – 2 அல்லது 3
 • நாட்டுச் சர்க்கரை – 1/2 கப்
 • ஏலக்காய் தூள் – 3/4 தேக்கரண்டி
 • பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
 • வறுத்த எள்- 2 தேக்கரண்டி

செய்முறை

 • வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு நன்கு மசித்து கொள்ளுங்கள்.
 • அரிசி மாவு, கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஏலக்காய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாக கலக்கவும். இவற்றை எல்லாம் கலந்த பிறகு எள் சேர்க்கவும்.
 • இட்லி மாவை விட இந்த மாவின் நிலைத்தன்மை சிறிது தடிமனாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 • பனியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
 • ஒவ்வொரு குழியிலும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றவும்.
 • பணியாரத்தின் விளிம்புகள் பொன்னிறமாக மாறும் வேக விடவும். 
 • பணியாரம் ஒருபுறம் பொன்னிறமாக மாறிய பிறகு இன்னொரு பக்கத்தை வேக வைக்கவும்.
 • மிதமான தீயில் மேலும் இரண்டு நிமிடங்கள் பணியாரத்தை வேக வைக்கவும். வெப்பம் அதிகமாக இருந்தால், உட்புறம் சமைப்பதற்கு முன்பு வெளியே மிக விரைவாக பழுப்பு நிறமாக மாறும். மிதமான தீயில் வேகவையுங்கள்.
 • உண்ணியப்பம் இரண்டு புறமும் பொன்னிறமாக மாறி வெந்து முடிந்ததும், சாப்பிட தயாராக இருக்கும்.
 • அவ்வளவுதான் சுவையான உண்ணியப்பம் பரிமாற தயாராக இருக்கும்.
 • கேரளா ஸ்டைல் உண்ணியப்பத்தை உங்கள் குழந்தைகளுக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள்.

Views: - 246

0

0

Leave a Reply