தேன் மாதிரி உங்க சருமம் வழு வழுன்னு அழகா ஷைனிங்கா இருக்க என்ன பண்ணனும்?!

5 July 2021, 9:04 am
how to make your face smooth using honey
Quick Share

பண்டை காலத்தில் இருந்தே தேன் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை உணவாகவும் மருந்தாகவும் உபயோகப்படுத்தி வருகிறோம். ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் ஃபிளவனாய்ட்ஸ் நிறைந்த தேனில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மேலும் தேனில் ஆன்டிபாக்டீரியல் தன்மை உள்ளதால் பல விதமான சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

அழகு பெறுவதற்கு தேனை பல விதமாக நாம் பயன்படுத்தலாம். தேனை தனியாகவோ அல்லது வேறு ஒரு பொருளுடன் சேர்த்தோ பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது தேனை சரும பராமரிப்பிற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பிளாக் ஹெட்ஸ்:

தேனை முகத்தில் தடவும் போது அது முகத்தில் உள்ள போர்களை திறந்து பிளாக் ஹெட் என்று சொல்லப்படும் கருப்பு நிற புள்ளிகளை நீக்கி விடுகிறது. ஆன்டிஆக்ஸிட்ன்டு, ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கொண்ட தேன் பருக்களையும் விழச் செய்கிறது. அதே நேரத்தில் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து அழகாக்குகிறது.

இறந்த செல்கள்:

பழைய மற்றும் இறந்த செல்கள் முகத்தில் இருந்தால் அது ஒரு வித எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். இந்த இறந்த செல்களை நீக்க தேனை நீங்கள் பயன்படுத்தலாம். செயற்கையாக செல்களை நீக்க பயன்படுத்தப்படும் பொருட்களைக் காட்டிலும் தேன் உங்கள் சருமத்தில் மென்மையாக இருக்கும். பொருமையாக தேனை முகத்தில் தடவி வர அதன் நிறத்தையும் மாற்றுகிறது.

பருக்கள்:

தேனில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளதால் பருக்களில் இருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்குகிறது. மேலும் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கிறது.

ஈரப்பதம்:

முகத்தில் தேவையான அளவு ஈரப்பதம் இல்லாமல் போனால் முகம் வறண்டு எரிச்சலை ஏற்படுத்தும். தேனை முகத்தில் தடவிக் கொண்டால் அது முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கி பொலிவாக மாற்றுகிறது. தேனில் உள்ள ஹியூமெக்டன்ஸ் மற்றும் எம்மோலியன்ட்ஸ் தண்ணீரின் அளவை சரி செய்து வறட்சியை குறைக்கும்.

வயதான தோற்றம்:

தேன் என்பது இயற்கையான ஆன்டிஏஜிங் சரும பராமரிப்பு பொருள். ப்ரீ ராடிக்கல் பாதிப்பில் இருந்து காப்பாற்றும். தேனை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது அது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி வயதான தோற்றத்தை மாற்றுகிறது. முகத்தை பளபளப்பாக இருக்க செய்கிறது.

Views: - 236

0

0