உலக உணவு பாதுகாப்பு தினம்: ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை இப்படி தான் சேமிக்க வேண்டும்!!!

Author: Hemalatha Ramkumar
7 June 2023, 10:41 am

உலக உணவு பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உணவு தரத்தை கவனத்தில் கொள்வதற்கான முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள 10 பேரில் ஒருவர் உணவு மூலமாக பரவும் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் உணவு பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் விதமாக, UN உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஒரு கருப்பொருளை அறிவிக்கும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டின் உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள் “தரமான உணவுகள் உயிர்களைக் காக்கும்” என்பதாகும். உயிர்களைப் பாதுகாப்பதிலும், உணவு மாசுபடுவதைத் தடுப்பதிலும் உணவுத் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

இந்த உலக உணவுப் பாதுகாப்பு தினத்தில், உணவின் தரத்தை பராமரிக்க, காய்கறிகள் மற்றும் அசைவங்களை எப்படி முறையாக குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது என்று பார்ப்போம்.

உங்கள் குளிர்சாதன பெட்டியில்
காய்கறிகளை எப்படி சேமிக்க வேண்டும்?

காய்கறிகளை சேமித்து வைக்கும் போது, குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன், அவற்றை நன்கு கழுவி வைக்க வேண்டும். காய்கறிகளை காற்று உள்ளே செல்லக்கூடிய டப்பாக்கள் அல்லது பைகளில் சேமித்து வைக்க வேண்டும். இது அவை ஈரப்பதத்தை இழக்காமல் இருக்க உதவும். இறைச்சி அல்லது மீன்களிலிருந்து காய்கறிகளை தனியாக வைப்பதும் முக்கியம்.

அசைவ பொருட்களை சேமிப்பது எப்படி?
இறைச்சி, மீன் மற்றும் கோழி போன்ற அசைவப் பொருட்களை தனித்தனி, சீல் செய்யப்பட்ட பைகளில் சேமித்து வைப்பதை உறுதி செய்யவும். இவற்றை குளிர்சாதனப்பெட்டியின் மேல் அலமாரியில் வைக்கவும். அசைவப் பொருட்களையும் காய்கறிகளிலிருந்து தனியாக வைக்க வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!