அடடா… ஹார்மோன் பிரச்சினைக்கு இதை செய்தாலே போதுமா… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!!!

Author: Hema
13 September 2021, 12:36 pm
Quick Share

சரியான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நேர்மறையான எண்ணங்களின் கலவையானது ஒருவரின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதை ஒரு படி மேலே எடுத்து செல்ல, ஹார்மோன் ஆரோக்கியத்தை சீராக்க சில யோகப் பயிற்சிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்துவது மாத்திரைகள் மூலமாக நடந்து விடாது. ஊட்டச்சத்து குறித்த உங்கள் அணுகுமுறை, உடற்பயிற்சி மற்றும் நேர்மறை அடிப்படையில் முழுமையானதாக இருக்க வேண்டும். அதற்கான ஒரு சில யோகா பயிற்சிகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

1. மாற்று நாசி மூச்சு பயிற்சி:
இந்த பயிற்சியானது உங்கள் உடல் முழுவதும் சமநிலையை அடைய உங்களுக்கு உதவும். இது உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி , உங்கள் உடலின் சீரான இயக்கத்திற்கு உதவும். மேலும் இது உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, ஹார்மோன்களின் சிறந்த உற்பத்திக்கு உதவும்.

பெண்களில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க
பிட்யூட்டரி மற்றும் ஹைப்போதலாமஸ் போன்ற பிற நாளமில்லா சுரப்பிகளுடன் கருப்பைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது மிக முக்கியமான ஒன்று. அதனால்தான் பட்டாம்பூச்சி போஸ் (பத்ராசனம்), உபவிஷ்டகோணாசனம், ஹலாசனம், சர்வங்காசனம் போன்ற ஆசனங்களைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

2. வஜ்ராசனம்:


இரவு உணவுக்குப் பிறகு வஜ்ராசனம் நடைப்பயிற்சிக்கு ஒரு நல்ல மாற்றியாக இருக்கும். ஏனெனில் இந்த ஆசனம் உங்கள் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த பெரிதும் கைக்கொடுக்கும்.

3. பிரமாரி பிராணயாமம்:


இந்த நடைமுறை கருவுறுதல், ஹார்மோன் சமநிலை மற்றும் தூக்கத்தை மேம்படுத்துவதுடன், ஒற்றைத் தலைவலியைக் குறைக்கவும் அறியப்படுகிறது.

4. பிரதிபக்ஷ பாவன ஆசனம்:
ஒவ்வொரு எதிர்மறை எண்ணத்தையும் நேர்மறையாக மாற்றுவது முக்கியம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் போது, ​​நாம் எதிர்மறை எண்ணங்களை சிந்திக்க முனைகிறோம். எனவே, ஒவ்வொரு முறையும் நீங்கள் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளும்போது அது உடலில் பல எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை எதிர்கொள்ள இந்த யோகாசனம் உங்களுக்கு உதவும்.

Views: - 273

1

0