இந்த எட்டு அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா… அப்போ அது சிறுநீரக நோயா கூட இருக்கலாம்!!!

19 April 2021, 6:21 pm
Quick Share

தற்போது பெரும்பாலான  மக்கள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அதன் அறிகுறிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாக 10 சதவிகித மக்கள் மட்டுமே தங்களுக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதை  அறிந்து கொள்கின்றனர். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழந்த குடும்ப வரலாறு போன்ற பல காரணங்களால் சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன.

இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலே கண்டுபிடித்து விட்டால். சிறுநீரக நோய்களுக்கு  சிகிச்சையளிக்க முடியும். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் அவை அவ்வளவு வெளிப்படையாக இருக்காது. எனவே நீங்கள் அவற்றைத் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். சிறுநீரக நோய்களின் பொதுவான அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சிறுநீரக நோய்களின் பொதுவான அறிகுறிகள்:

1. அதிக சோர்வு:

சிறுநீரக செயல்பாடுகளில் ஏற்படும் அசாதாரணங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுகள் மற்றும் அசுத்தங்கள் உருவாக வழிவகுக்கும். இது மக்களை சோர்வடையச் செய்கிறது. மேலும் இதனால் அவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாது. இதனுடன், இது இரத்த சோகையையும் ஏற்படுத்தக்கூடும். இது சோம்பலை உணர ஒரு முக்கிய காரணம்.

2. தூங்குவதில் சிக்கல்:

சிறுநீரகங்கள் நச்சுகளை சரியாக வடிகட்டாததன்   விளைவாக, அவை இரத்தத்திலே இருக்கும்.  இதனால் சரியான தூக்கம் வராமல் போகலாம். 

3. சருமத்தில் வறட்சி  மற்றும் அரிப்பு: 

தோலில் வறட்சி மற்றும் அரிப்பு சிறுநீரக பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சிறுநீரகத்தில் முறையற்ற வடிகட்டுதல் காரணமாக, இரத்தத்தில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லாமல் போகிறது. இது உங்கள் சருமத்தை வறண்டு போக செய்து, அரிப்புக்குள்ளாக்குகிறது.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்: 

நீங்கள் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருந்தால், குறிப்பாக இரவில், அது சிறுநீரக கோளாறின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். வடிகட்டிகள் சேதமடைந்துள்ளதால் இது நிகழ்கிறது. இது சிறுநீர் தொற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

5. சிறுநீரில் இரத்தம்:

ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை வடிகட்டும்போது உடலில் சிவப்பு இரத்த அணுக்களை வைத்திருக்கின்றன. ஆனால் சேதமடைந்த சிறுநீரகம் அவற்றை சரியாக வடிகட்ட முடியாது என்பதால் இரத்த அணுக்கள் சிறுநீரில் கசியத் தொடங்கும்.

6. சிறுநீரில் நுரை:

உங்கள் சிறுநீரில் அதிகப்படியான நுரை  இருந்தால், அது கவனிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் அது சிறுநீரக நோயின் அறிகுறியாகும். இது சிறுநீரில் உள்ள புரதத்தை குறிக்கும்.

7. கண்களில் வீக்கம்:

உங்கள் சிறுநீரகம் சிறுநீர் வழியாக நிறைய புரதங்களை வெளியேற்றி  கொண்டிருக்கும். எனவே உங்கள் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம்.

8.பசியின்மை: 

உங்களுக்கு பசி எடுக்கவில்லை மற்றும் உங்கள் தசைகளில்  தசைப்பிடிப்பு உள்ளது என்றால் அது சிறுநீரக நோயின் ஒரு அறிகுறியாகும்.  இரத்தத்தில் உள்ள நச்சுகள், குறைந்த அளவு கால்சியம் மற்றும் கட்டுப்பாடற்ற பாஸ்பரஸ் காரணமாக இது நிகழ்கிறது.

Views: - 118

0

0