Covid 19: கொரோனா சமயத்தில் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்

3 June 2021, 8:57 am
important information to know during the covid 19 period
Quick Share

கொரோனா சமயத்தில் சாதாரணமாக சளி, இருமல் என்று இருந்தாலே கொரோனா தொற்றாக இருக்குமோ என பதற்றத்துடன் இருக்கின்றனர். அதிகம் பதற்றமடைய வேண்டிய தேவையில்லை. முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இது குணமடையக்கூடிய ஒரு நோய் தான் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

தொற்று சோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போதோ அல்லது வீட்டிலேயே ஆக்சிமீட்டர் அல்லது ரத்த அழுத்தமானி உடன் சோதனைகளை மேற்கொள்ளும்போதோ ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்த அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். தெரிந்துக்கொள்ளாமல் சாதாரணமாக பார்த்துவிட்டு அப்படியே இருந்துவிடக்கூடாது. எனவே நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்களை இப்போது தெரிந்துகொள்வோம்.

இரத்த அழுத்த அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

  • 120 / 80 – இயல்பான ரத்த அழுத்தம்
  • 130 / 85 – சாதாரண அளவு (prehypertension)
  • 140 / 90 – உயர் ரத்த அழுத்தம் (Hypertension)
  • 150 / 95 – மிக அதிக ரத்த அழுத்தம் (Hypertension)

ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

ஆக்சிமீட்டரில் காண்பிக்கப்படும் SpO2 அளவு தான் ஆக்சிஜன் அளவு ஆகும்.

  • 94-இயல்பானது ஆக்சிஜன் அளவு
  • 95 முதல் 100 வரை – நல்ல ஆக்சிஜன் அளவு 
  • 94 முதல் 90 வரை – குறைந்த ஆக்ஸிஜன் அளவு
  • 90-க்கு கீழே – மிகவும் குறைந்த ஆக்சிஜன் அளவு.

குறைந்த ஆக்சிஜன் அளவு இருக்கும்போதே மருத்துவரிடம் சென்று  மருத்துவ ஆலோசனைப் பெற்றுக்கொள்வது நல்லது. 

நாடிதுடிப்பு (pulse):

  • நிமிடத்திற்கு 72 (நிலையானது)
  • 60 – 80 (சாதாரண அளவு)
  • 90 – 120 (அதிகரிக்கப்பட்ட அளவு) 

பயப்படாமல், பதற்றப்படாமல் இருப்பது மிகவும் அவசியம். 

உடல் வெப்பநிலை:

  • 92-98.6 0 F – சாதாரண வெப்பநிலை
  • 99.0 0 F – சாதாரண காய்ச்சல்
  • 100 0 F – 102 0 F  – அதிக காய்ச்சல்

High Resolution CT எனும் CT SCAN COVID-19 தொற்று பரிசோதனை அளவுகள்:

  • HRCT ஸ்கோர்: 0-8 / 25 (லேசான தொற்று).
  • HRCT ஸ்கோர்: 9-18 / 25 (மிதமான தொற்று).
  • HRCT ஸ்கோர்: 19-25 / 25 (கடுமையான தொற்று)

மருத்துவரின் ஆலோசனையின்றி  CT ஸ்கேன் எடுக்க வேண்டாம்.

Views: - 213

1

1