நீரிழிவு நோயாளிகள் மீன் இறைச்சி சாப்பிடலாமா? இதனால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமா?

19 July 2021, 6:02 pm
IS fish and diabetes RELATED
Quick Share

மீன் சாப்பிட்டால் நீரிழிவு நோய் பிரச்சினை அதிகமாகுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆனால் ஒரு முக்கிய ஆய்வின்படி, அதிக அளவு மீன்  உட்கொள்வது நீரிழிவு நோயின் வளர்ச்சியை முற்றிலும் குறைக்கும் என்றும், உடல் பருமன் அதிகமாக உள்ள நபர்களிடையே அதன் ஆபத்தை குறைக்க உதவும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதற்கு,  இன்சுலின் எதிர்ப்பைத் தடுப்பது மற்றும் இதய நோய்கள் போன்ற நீரிழிவு தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின் D போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மீன் இறைச்சியில் நிறைந்து காணப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவு இந்த மீன் என்று சொல்லலாம்

இந்த கட்டுரையில், மீன் இறைச்சி நீரிழிவு நோய்க்கான தீர்வாக விளங்குவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்:

மீன் இறைச்சியில் வைட்டமின் D நிறைந்து காணப்படுகிறது. சால்மன் மற்றும் ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்களை வழக்கமாக உட்கொள்வது உடலில் வைட்டமின் D அளவை அதிகரிக்க உதவும் என்று ஒரு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் D நீரிழிவு நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் D உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவக்கூடும், இதனால் நீரிழிவு நோயின் ஆபத்தை குறைக்க உதவும். 

மீன் இறைச்சி புரதச்சத்துக்கள் நிறைந்த மிகவும் சத்தான நல்ல உணவு ஆகும். மீன்களில் ஒரு தனித்துவமான உயர்தர புரதங்கள் உள்ளதால் மற்ற இறைச்சியுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்களை வழங்கக்கூடியது. 

மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக இருப்பதால் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒமேகா-3 நீரிழிவு நோய்க்கான முதன்மைக் காரணியாகக் கருதப்படும் அழற்சி-சார்பு சைட்டோகைனின்களைக் குறைக்க உதவுகிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து கொழுப்பின் அளவை சீராக்க உதவுகிறது, இதனால் நீரிழிவு நோயால் தூண்டப்படும் இதய நோய்களின் அபாயத்தை குறையும்.

நீரிழிவு நோயின் வளர்ச்சியில் உடல் பருமன் முக்கிய பங்கு வகிக்கிறது. மீன் இறைச்சி உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்டுக்கொள்ளும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் மீன் இறைச்சி நார்ச்சத்து நிறைந்தது என்பதால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்கும் தன்மைக் கொண்டது. 

மீன் இறைச்சி வைட்டமின் B12, வைட்டமின் B6, செலினியம் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாகவும் திகழ்கிறது. இவை அனைத்துமே இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. எனவே மீன் இறைச்சி நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவிதமான ஆபத்துக்களையும் ஏற்படுத்தாது. இது அனைவரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான உணவாகும்.

Views: - 176

0

0

Leave a Reply