கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா கூடாதா???

Author: Hemalatha Ramkumar
16 May 2023, 10:38 am

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது பல நோய்கள் வராமல்
தடுக்க உதவும். தண்ணீர் இவ்வளவு முக்கியமானதாக கருதப்பட்டாலும், குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒரு சில உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் ஒருவர் கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது.

கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கரும்பு சாப்பிட்ட ஒரு மணி நேரம் வரை தண்ணீர் குடிக்கவே கூடாது. கரும்பில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். எனவே, கரும்பு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால், தாதுக்கள் தண்ணீருடன் வினைபுரியும்.

இதன் விளைவாக வயிற்று வலி, வீக்கம், மார்பு இறுக்கம், வயிற்றுப் புண்கள், வாய் புண்கள் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, கரும்பு சாப்பிட்ட பின் தண்ணீர் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

கரும்பு தவிர, சிலர் தெரிந்தோ தெரியாமலோ, சாலடுகள், எள், பழங்கள், இனிப்புகள் மற்றும் வேர்க்கடலை போன்ற உணவுகளை உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்கிறார்கள். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கூறிய உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகும் தவறுதலாக கூட தண்ணீர் குடிக்க வேண்டாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?