கருவுறுதல் மசாஜ் செய்தால் இயற்கையாக கருத்தரிக்க முடியுமா… தெரிந்து கொள்ளலாம் வாங்க!!!

5 February 2021, 9:36 pm
Quick Share

நம் முன்னோர்கள் சந்திக்காத பல நோய்கள் இன்று நம்மை வாட்டி எடுத்து வருகின்றன. அதற்கு முதல் காரணமாக இருப்பது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் தான். இந்த பிரச்சினைகளில் ஒன்று தான் குழந்தையின்மை. குழந்தையின்மை பல காரணங்களால் ஏற்படுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரையும் சரமாரியாக பாதிக்கிறது. குழந்தையின்மை காரணமாக பல பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இயற்கையில் கருவுறாமல் போவதால் அறிவியல் முறையைப் பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ளும் முறைகளை தேடுகிறார்கள். இன்னும் ஒரு சில சுய கருவுறுதல் போன்ற இயற்கை முறையையும் நம்புகிறார்கள். இதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

கருவுறுதல் மசாஜ்:

இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் வாய்ப்புகளை மேம்படுத்தும் ஒரு சிகிச்சை தான் கருவுறுதல் மசாஜ். வயிறு ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஆகியவற்றை மேம்படுத்தும் இயற்கை முறை இது. கருவுறுதல் மசாஜ் குழந்தையின்மையை போக்குமா என்பது குறித்த ஆய்வுகள் அறிவியல் ரீதியாக இன்னும் செய்யப்படவில்லை. இந்த மசாஜை செய்யும் போது மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்குகிறது. இதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது மட்டும் இல்லாமல் இதனால் வேறு சில நன்மைகளும் கிடைக்கிறது. அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம். 

1. ஹார்மோன் சமநிலை:

மசாஜ் செய்யும் போது அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இரத்தம் மூலம் தேவையான இடத்திற்கு ஹார்மோன்கள் எடுத்து செல்லப்படுகிறது. மாதவிடாய் தள்ளிப்போவது, அண்ட விடுப்பு சீரற்று காணப்படுவது, கருப்பை புறணி எண்டோமெட்ரியல் தடித்து காணப்படுவது போன்றவற்றிற்கு இந்த மசாஜ் நன்றாக உதவும். மேலும் இந்த மசாஜானது உடலின் நல்ல ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆக்ஸிடாசின் அளவை அதிகரிக்கும்.

2. சீரான இரத்த ஓட்டம்:

உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சீரான இரத்த ஓட்டம் செல்ல இந்த மசாஜ் உதவுகிறது. இதனால் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் தடையில்லாமல் கிடைக்கிறது. இதன் விளைவாக கருமுட்டை வலுவாகிறது. உடலுறவுக்கு பிறகு விந்து சரியான இடத்திற்கு போய் சேருவதற்கும், கருப்பை வாயில் உள்ள சளியின் தரத்தை உயர்த்துவதற்கும் கருவுறுதல் மசாஜ் உதவி புரிகிறது. 

3. கருப்பை அழுக்கை நீக்குகிறது:

கருவுறுதல் மசாஜ் செய்வதால் கிடைக்கும் சிறப்பான ஒரு பலன் இது என்று சொல்லலாம். மாதவிடாய் காலத்திற்கு பிறகு கருப்பையில் தேங்கி கிடக்கும் அழுக்கை வெளியேற்ற இந்த மசாஜ் பெரிதும் கைக்கொடுக்கும். தேங்கி போன பழைய கழிவுகள் கருப்பையில் இருப்பது நல்லதல்ல. இது தேவையற்ற வலி உபாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த பிரச்சினையை கருவுறுதல் மசாஜ் எளிதில் போக்குகிறது. 

4. வயிற்று வடுக்கள் போக:

சிசேரியன், இடுப்பு பிரச்சினைகள், ஃபாலோப்பியன் குழாய்களில் உள்ள அடைப்பு, வயிற்றில் அறுவை சிகிச்சை போன்றவை காரணமாக இருக்கும் வடுக்களை போக்கும் தன்மை கருவுறுதல் மசாஜிற்கு உண்டு. மேலும் வயிறு சீராக அதன் பணியை செய்ய இந்த மசாஜ் உதவும்.

5. வலி உணர்வை குறைக்க:

மாதவிடாய் காலத்தில் ஒரு சிலருக்கு தாங்க முடியாத வலி ஏற்படும். கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் கருவுறுதல் மசாஜ் வலியை தணிக்கிறது. குடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு அதன் சீரான இயக்கத்திற்கு துணை புரிகிறது. இந்த மசாஜ் ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகின்றது. இத்தகைய நன்மைகள் அடங்கிய கருவுறுதல் மசாஜை மருத்துவர் ஆலோசனையோடு நீங்களும் முயற்சித்து பாருங்கள். 

Views: - 30

1

0