மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை நோய் யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்புண்டு? இது தொற்றுநோயா?

10 June 2021, 9:32 am
is mucromycosis aka black fungus is contagious
Quick Share

மியூகோர்மைகோசிஸ் என்பது மிகவும் அரிதான ஒரு நோய். ஆனால் சமீப காலமாக உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் கிருமிகளையும் நோய்களையும் எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்ளும் மக்களிடையேயும் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் சில குறிப்பிட்ட உடல்நல பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  • நீரிழிவு நோய், குறிப்பாக நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ்,
  • புற்றுநோய்,
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்,
  • ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள்
  • நியூட்ரோபீனியா (குறைந்த எண்ணிக்கையிலான வெள்ளை இரத்த அணுக்கள்)
  • நீண்ட காலமாக கார்டிகோஸ்டீராய்டு பயன்படுத்துபவர்கள்
  • உடலில் அதிக இரும்புச்சத்து (இரும்பு ஓவர்லோட் அல்லது ஹீமோக்ரோமாடோசிஸ்) இருந்தால்,
  • அறுவை சிகிச்சை, தீக்காயங்கள் அல்லது காயங்கள் காரணமாக தோல் காயங்கள் ஏற்பட்டால்,
  • குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் பிறத்தல் 

போன்ற  உடல்நல குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் எப்படி ஏற்படுகிறது?

சுற்றுச்சூழலில் இருக்கும் பூஞ்சை வித்திகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மக்களுக்கு மியூகோமிகோசிஸ் பிரச்சினை ஏற்படுகிறது. உதாரணமாக, ஒருவர் காற்றில் இருந்து பூஞ்சை வித்திகளை உள்ளிழுத்த பிறகு இந்நோய் நுரையீரல் அல்லது சைனஸ் ஆகியவற்றை பாதிக்கும். தீ காயங்கள் அல்லது பிற வகை தோல் காயங்கள் மூலம் பூஞ்சை சருமத்தில் நுழைந்த பிறகும் தோல் நோய் ஏற்படலாம்.

மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை ஒரு தொற்றுநோயா?

இல்லை. மியூகோர்மைகோசிஸ் மக்களிடையே அல்லது மக்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையில் பரவாது.

மியூகோர்மைகோசிஸ் ஏற்படாமல் பாதுகாப்புடன் இருப்பது எப்படி?

பூஞ்சை வித்திகளை சுவாசிப்பதைத் தவிர்ப்பது கடினம், ஏனெனில் மியூகோமைகோசிஸை ஏற்படுத்தும் பூஞ்சைகள் சுற்றுச்சூழலில் பொதுவாகவே இருக்கும். மியூகோமைகோசிஸைத் தடுக்க தடுப்பூசி இல்லை. நோயெதிர்ப்பு மண்டலங்கள் பலவீனமடைந்து இருந்தால், மியூகோர்மைகோசிஸ் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

முடிந்தவரை அசுத்தமான இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும், இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல வெளியில் செல்லும்போது N95 முகக்கவசங்களைப் பயன்படுத்தலாம்.

Views: - 199

0

0