உங்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகி விட்டதா…??? அப்போ இனி தினமும் அவர்களுக்கு இதை கொடுங்க!!!

1 October 2020, 9:00 am
Quick Share

குழந்தையை வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. அதிலும் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆறு மாதங்கள் வரை ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்க கூடாது. அதற்கு பிறகு குறிப்பிட்ட சில உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அவ்வாறு ஆறு மாதமான ஒரு குழந்தைக்கு கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவை எவ்வாறு தயார் செய்வது என பார்க்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

2- கேரட்

1- இனிப்பு உருளைக்கிழங்கு

1- பீட்ரூட்

3- பீன்ஸ்

1- ஆப்பிள்

20- ஸ்வீட் பட்டாணி

1- வாழைப்பழம்

தேவையான நீர்

செய்முறை:

*ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய கேரட்டை தோலுரித்து சேர்த்து கொள்ளுங்கள். கேரட் மூழ்கும் அளவிற்கு  தேவையான தண்ணீர் ஊற்றவும். கேரட்  மென்மையாக ஆகும் வரை  மூடி வைத்து சமைக்கவும். கேரட் குளிர்ந்ததும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி மென்மையாக அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இனிப்பு உருளைக்கிழங்கை தோலுரித்து சேர்க்கவும்.  இது வேக தேவையான தண்ணீர் ஊற்றி இனிப்பு உருளைக்கிழங்கு மென்மையாக வேகும் வரை மூடி போட்டு சமைக்கவும். இது குளிர்ந்ததும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி மென்மையாக அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பீட்ரூட்டை தோலுரித்து சேர்த்து இது வேக  தேவையான தண்ணீர் ஊற்றுங்கள். பீட்ரூட்  மென்மையாகவும் ஆகும் வரை மூடி போட்டு சமைக்கவும். இது குளிர்ந்ததும் அதை ஒரு பிளெண்டருக்கு மாற்றி மென்மையாக அரைக்கவும்.

*இதே போல பீன்ஸ், ஸ்வீட் பட்டாணி, கேரட் ஆகிய மூன்றையும் ஒன்றாகவும்,  ஆப்பிள் பழத்தை தனியாகவும் தோலுரித்து தேவையான தண்ணீரைச் சேர்த்து, மென்மையாக வேக  வைக்கவும். அவை குளிர்ந்ததும் ஒரு ஜாருக்கு மாற்றி மென்மையாக அரைக்கவும்.

*பழுத்த வாழைப்பழங்களை பிசைந்து வைத்து கொள்ளுங்கள். இதில் நாம் தயார் செய்த ஒவ்வொன்றும் ஒரு உணவு வகை. ஒவ்வொரு நாளுக்கும் ஒன்றை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.