தைராய்டு பிரச்சினை வராமல் தடுக்க இந்த சிம்பிளான விஷயத்தை ஃபாலோ பண்ணாலே போதும்!!!

7 September 2020, 9:57 pm
Quick Share

நம் உடலில் பல வகையான சுரப்பிகள் உருவாகின்றது. அதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சுரப்பி தான் தைராய்டு. தைராய்டு சுரப்பியானது நம் உடம்பில் உள்ள மூளையின் வளர்ச்சி, செரிமானம், எலும்பு கட்டுப்பாடு ஆகியவற்றை பார்த்துக் கொள்கிறது. இந்த சுரப்பியை கட்டுக்கோப்பில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். தற்போது பலர் இந்த தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தைராய்டு பிரச்னை பல பாதிப்புகளை நம் உடலில் ஏற்படுத்தும். எனவே இந்த தைராய்டு பிரச்சனையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரு சில ஆரோக்கிய குறிப்புகளை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறோம். அது என்ன என்பதை காண்போம். 

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உப்பு சேர்ப்பது வழக்கம். ஆனால் அந்த உப்பில் அயோடின்  இருக்கின்றதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அயோடின் குறைபாடு இருந்தால் மூளை வளர்ச்சி பாதிப்பு, தைராய்டு வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். 

பல ஆண்டுகளுக்கு முன் சர்வதேச மக்கள் தொகையில் 30 சதவீதம் மக்கள் இந்த அயோடின் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டனர். இதனை கண்டறிந்த அரசு உப்பில் அயோடின் சேர்ப்பதை உறுதி செய்தது. எனவே நீங்கள் வாங்கும் உப்பில் அயோடின் இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

தைராய்டு சுரப்பி குறைப்பாட்டில் மனஅழுத்தமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள், மன அழுத்தத்தால் அவதிபடுபவர்கள் கண்டிப்பாக விரைவில் இதனை சரி செய்ய வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் T3 என்ற தைராய்டு சுரப்பியின் உற்பத்தியை பாதிக்கின்றது.

அனைவரிடமும் அன்பு செலுத்துதல், பிடித்தவற்றை செய்வது, மெல்லிய இசை கேட்பது, நண்பர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, மூச்சு பயிற்சி மேற்கொள்வது, சந்தோஷமாக இருத்தல் போன்றவைகளை செய்தால் மன அழுத்தத்திலிருந்து விரைவில் மீண்டு வரலாம்.

தைராய்டு சுரப்பி உற்பத்தி செய்யும் T3 மற்றும் T4 ஹார்மோன்களை கட்டுப்படுத்துவதில் குடலுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. தைராய்டு சுரப்பியால் உருவாக்கப்படும் T4 ஹார்மோன் உடலின் செயல்பாட்டிற்காக T3 ஆக மாற்றப்படுகின்றது. குடலின் ஆரோக்கியம் சரியாக இல்லாத பட்சத்தில் இந்த மாற்றம் சரிவர நிகழாது. எனவே நம் குடலின் ஆரோக்கியத்தை நாம் கவனித்து கொள்ள வேண்டும். புளித்த உணவுகளை சாப்பிடுவதின் மூலம் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

கணவன் மனைவி இடையில் நல்ல ஒரு சந்தோஷமான உறவு இருத்தலும் அவசியம். கணவன் மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடும் போதும் நெருக்கமாக இருக்கும் போதும் எண்டோப்பிரின் என்ற ஹார்மோன் உருவாக்கப்படுகின்றது. இந்த ஹார்மோனானது வளர்சிதை மாற்றம் ஏற்படுவதை தடுக்கின்றது.

மேலும் உணவு முறைகளை பொருத்த அளவில் குறுக்குவெட்டி காய்கறிகளான முட்டை கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது. இக்காய்கறிகள் தைராய்டு வீக்கத்தை ஏற்படுத்தும். அதுவே தினை வகைகள், வேர்க்கடலை, பச்சை கீரை வகைகள் போன்றவை சாப்பிடுவது தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உடல் ஆரோக்கியத்திற்கும் நேரம் செலவழித்து உடல் நலம் பேன கேட்டுக் கொள்கிறோம்.

Views: - 0

0

0