முழுமையான ஊட்டச்சத்தை பெற பழங்களை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும்!!!

Author: Hemalatha Ramkumar
4 February 2023, 4:19 pm

பழங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த காரணத்திற்காக, ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பழத்தை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லது என்றாலும், ஊட்டச்சத்து மதிப்பை பராமரிக்க குறிப்பிட்ட நேரத்தில் தான் பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. அப்போதுதான் அதிலிருந்து நமக்கு வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக கிடைக்கும்.

பழங்களை எப்போது சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்?
காலை நேரத்தில்:
பழங்களை சாப்பிடுவதற்கு காலை நேரம் ஏற்றது. ஆனால் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே காலையில் எழுந்து முகம் கழுவி, தண்ணீர் குடித்து, சிறிது நேரம் கழித்து பழத்தை சாப்பிடலாம். தூங்கி எழுந்தவுடன் பழங்களை உண்பதால் விரைவில் ஜீரணமாகும். இதன் விளைவாக முக்கிய வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் சரியாக செயல்படும்.

இரண்டு உணவு இடைவேளைகளில்: காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் ஒரு சிலருக்கு பசி எடுக்கும். இந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும். ஏனெனில் காலை உணவை சாப்பிட்ட பிறகு வயிறு கனமாக இருந்தால், பழங்கள் அந்த உணவை மிக எளிதாக ஜீரணிக்கும்.

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும்: உடற்பயிற்சி செய்யத் தேவையான ஆற்றலைப் பெற அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்ணுங்கள். இந்த நேரத்திலும் பழங்களை உண்ணலாம்.

பழங்களை எப்போது சாப்பிடக்கூடாது:-
இரவில் தூங்கும் முன் : தூங்கும் முன் பழங்களை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், அது தூக்கத்தையும் சீர்குலைக்கும்.

உணவுடன்: பழங்களை முக்கிய உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் குறைகிறது. பழங்களின் சத்துக்களை உடலுக்குச் சரியாகச் செலுத்த உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுங்கள்.

டீ அல்லது காபி சாப்பிடும்போது : டீ சாப்பிடும் போது பழங்களை சாப்பிடுவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் உடலின் செரிமான அமைப்பில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?