நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்… ரொம்ப கவனமா இருக்கணும் நீங்க!!!

Author: Hemalatha Ramkumar
7 April 2022, 4:38 pm

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது உங்கள் வாழ்க்கையிலிருந்து பல வருடங்களை எடுத்துக்கொள்வதோடு பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக, தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள பலருக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பலர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக நேரம் உட்கார்ந்திருப்பதும், சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பதும் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும். இதன் பக்க விளைவுகளில் இதய பிரச்சினைகள் அடங்கும். மேலும் தமனிகள் தடுக்கப்படுவது போன்றவை இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இது நுரையீரல் திறனைக் குறைப்பதன் மூலம் உங்கள் சுவாச அமைப்பையும் பாதிக்கலாம்.

அதிக நேரம் எழுந்திருக்காமல் உட்காருவதும் உடல் பருமனுக்கு ஆளாக நேரிடும், வயிற்றைச் சுற்றிக் குவிந்துள்ள கொழுப்பு, அசாதாரணமான கொலஸ்ட்ராலுக்கு வழிவகுக்கும். இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம், மூட்டு வலி, கீழ் முதுகு மற்றும் கழுத்து வலியை ஏற்படுத்தும்.

நகராமல் இருப்பது மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இது உந்துதல் இல்லாமை, கவனம் செலுத்துவதில் சிக்கல் மற்றும் கவலைக்கு வழிவகுக்கும்.

இந்த சுழற்சியை எப்படி உடைப்பது?
உங்கள் வேலை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், ஒவ்வொரு 2 மணிநேரமும் உட்கார்ந்த பிறகு எழுந்து நடப்பது முக்கியம். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை விட முக்கியமானது எதுவுமில்லை.

குறைந்தபட்சம் 15 நிமிடமாவது வாக்கிங் செல்ல வேண்டும். நீங்கள் எழுந்து உங்கள் பாட்டிலில் தண்ணீரை நிரப்பலாம். உங்கள் முதுகு மற்றும் முதுகெலும்பை நேராக வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?