போற போக்குல ரெண்டு துளசி இலைய வாயில போட்டு தினமும் சாப்பிட்டு பாருங்க… மாற்றங்கள கண்கூடா பார்ப்பீங்க!!!

Author: Hemalatha Ramkumar
19 April 2023, 10:17 am

துளசி செடியானது இந்தியாவில் ஆன்மீகம் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாவரமாக கருதப்படுகிறது. வீடுகளில் துளசி மாடம் அமைத்து வழிபடுவது பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வரும் ஒன்றாகும். மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வர ஏராளமான நோய்கள் குணமாகும். இந்த பதிவில் துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

துளசி இலைகளில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதன் மூலமாக இதய நோய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.

துளசியில் ஆன்டி பாக்டீரியல் கலவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது தொண்டையில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். குழந்தைகளுக்கு தினமும் துளசி இலை கொடுத்து வர அவர்களின் ஞாபக சக்தி மேம்படும்.

தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வர நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். நரம்பு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் துளசி இலைகளை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

நம் வீடுகளிலே இருந்தாலும், துளசி இலையை பறித்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. வெறும் இரண்டு நிமிடங்களே தேவைப்படும் இந்த செயலை செய்து வர நல்ல ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?