கொளுத்தும் வெயிலால் உடல் சூடு பிடித்துக்கொள்கிறதா? அட கவலையவிடுங்க!

8 May 2021, 4:10 pm
lemon cinnamon mint water to safe yourselves from summer
Quick Share

இந்த வருடம் கோடையில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. AC மற்றும் ஃபேன் இல்லாமல் இருக்கவே முடியவில்லை. வெளியில் சென்று வந்தாலே ஆடை எல்லாம் நனைந்துவிடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் உடல் சூடு பிடித்துக்கொள்கிறது. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

அதற்கு நீங்கள் நீராகாரம், பழச்சாறுகள் மற்றும் பிற பானங்களை அருந்தி உடலை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். சரி, உடல் சூடு பிடிக்காமல் இருக்க என்னென்ன நீராகாரங்களை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

கோடையில், சாதாரண தண்ணீரை விட இலவங்கப்பட்டை மற்றும் புதினா இரண்டையும் சேர்த்த தண்ணீர் குடிப்பது நல்லது. நீங்கள் புளிப்பு சுவை விரும்பினால், நீங்கள் எலுமிச்சையையும் சேரத்துக்கொள்ளலாம். இதனால் நீரின் சுவை இரட்டிப்பாகும். இந்த தண்ணீரை நீங்கள் நாள் முழுவதும் சாதாரண தண்ணீரைப் போல குடித்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.

புதினாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இது உடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக கோடையில் உங்கள் உணவில் நிறைய புதினா சேர்த்தால், இது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.

இலவங்கப்பட்டை வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பல்வேறு பருவகால நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும்.

எலுமிச்சை ஒரு அத்தியாவசிய கோடைகால பழம். இது வைட்டமின் C, ஃபைபர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளது, இது நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது.

இந்த புதினா, இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படும் பானம் எடை இழப்புக்கு பெரிதும் உதவியாகவும் இருக்கிறது. எனவே கோடையில் இந்த பானத்தை நீங்கள் குடித்தால், உடல் வெப்பத்தை குறைக்கலாம் மற்றும் சிரமமே இல்லாமல் எளிதில் உடல் எடையையும் குறைக்கலாம்.

Views: - 335

0

0