இனி கீரையை சமைத்து சாப்பிடாமல் சாறு வடிவில் அருந்தி அதன் அதிசயங்களை அனுபவித்து பாருங்களேன்!!!

19 August 2020, 7:09 pm
Quick Share

கீரை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.  மேலும் இது பெரும்பாலும் தவிர்க்கப்பட்ட காய்கறிகளில் ஒன்றாகும். ஆனால் ஒரு சில கீரைகளில் சிறந்த சுவை மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. 

தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரையை  சாறு வடிவில் உட்கொள்ளும்போது அது மிகவும் சிறந்ததாக அமைகிறது. ஏனெனில் நீங்கள் சாறுடன் நார்ச்சத்து உட்கொள்வதால், அதன் ஒட்டுமொத்த நன்மைகளையும் சேர்க்கிறது. கீரையில் வைட்டமின்கள் A, C, E, K மற்றும் B காம்ப்ளக்ஸ், மாங்கனீசு, கரோட்டின்கள், இரும்பு, அயோடின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் மற்றும் மதிப்புமிக்க அமினோ அமிலங்கள் உள்ளன. ஆரோக்கியமாக இருக்க உதவுவதைத் தவிர, இது இயற்கையில் காரமாக இருப்பதால் உடலின் pH ஐ சீராக்க உதவுகிறது. 

மேலும், கீரையின் நன்மைகள் மனித உடலின் ஒரு பகுதிக்கு மட்டுமல்ல. கீரையானது  உங்கள் எலும்புகள், வயிறு, கண்கள் மற்றும் தசைக்கு சிறந்தது. கீரை சாற்றை அப்படியே எடுத்து கொள்ள பலரும் விரும்புவதில்லை என்பதால் கேரட், ஆப்பிள், வெள்ளரி போன்ற பிற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 

கீரையை சமைத்து சாப்பிடவே உலகம் விரும்புகிறது. ஆனால் கீரை சாறு எடுத்து கொள்வதால் ஆற்றல் மூன்று மடங்கு அதிகரிக்கிறது என்றால் யார் செய்ய மாட்டார்கள்!  கூடுதலாக, சமீபத்திய ஆய்வுகள் கீரையை சாறாக அருந்துவதே அதை உட்கொள்வதற்கான சிறந்த வழியாகும் என்று கூறுகிறது.   இங்கே கீரை சாறு குடிப்பதன் நன்மைகளை பார்க்கலாம்:

கீரை செரிமானத்திற்கு நல்லது. இது வயிற்றின் புறத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மலச்சிக்கலை எளிதாக்குகிறது. புண்களை ஆற்ற உதவுகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை உங்கள் உடலை விட்டு வெளியேற்றுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கீரை சாறு சிறந்தது. ஏனெனில் இது கரு வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் தற்செயலான ரத்தக்கசிவு அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களில் தாய்ப்பாலின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

கீரையில் கரோட்டின் மற்றும் குளோரோபில் தடயங்கள் உள்ளன. இவை புற்றுநோயைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்த்து போராடுவதற்கும் அவசியம். பரந்த அளவிலான ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதை ஒரு சிறந்த புற்றுநோயை எதிர்க்கும் உணவாக ஆக்குகின்றன. குறிப்பாக கர்ப்பப்பை வாய், மார்பகம், வயிறு, புரோஸ்டேட் மற்றும் தோல் புற்றுநோயை தடுக்கிறது.

இந்த ஐந்து நன்மைகளுக்கு மேலதிகமாக, கீரை பார்வை சார்ந்த பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. வைட்டமின் A மற்றும் கரோட்டினாய்டுகள் இருப்பது கண் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது. உங்கள் கேரட் சாற்றில் கீரையைச் சேர்ப்பது இரவு குருட்டுத்தன்மை, கண்புரை வளர்ச்சி மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும்.

Views: - 1

0

0