உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்கள்… அதிர்ச்சி தரும் புது ஆய்வு தகவல்கள்!!!

16 November 2020, 6:30 pm
Quick Share

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, தம் அடிப்பது போன்றவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரியங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு சில நேரத்தில் எதையும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்து இருப்பது கூட உயிருக்கு ஆபத்தாகி விடும் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உடலுக்கு எந்த வித அசைவுகளும் கொடுக்காமல், உடற்பயிற்சி செய்யாமலும்  இருந்தால் அது மரணத்தை சீக்கிரமாக வரவழைக்கும் காரணிகளுள் ஒன்றாகும். இது உங்களை பயமுறுத்துவதற்காக சொல்லப்படவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். 

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்தையும் விட மிக முக்கியமானது ஆரோக்கியம் என்னும் செல்வம். ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் வலிமையாக இருக்கும். குறைவான உடற்பயிற்சியில் ஈடுபவர்கள் அதிக மன சோர்வுக்கு ஆளாகிறார்கள் என லண்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. 

இந்த ஆய்வில் 40 முதல் 69 வயதிலான 152, 978 நபர்கள் பங்கேற்றனர். ஏரோபிக் உடற்தகுதியை எதிர்க்கும் ஸ்டேஷனரி பைக்கை பயன்படுத்துவதன் மூலம் இவர்கள் சோதிக்கப்பட்டனர். ஏழு ஆண்டுகளுக்கு பின்பாக அவர்களது மனச்சோர்வு ஆராயப்பட்டது. குறைவான உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களில் 98 சதவீதம் நபர்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு குறைவான மனச்சோர்வு இருப்பதை கண்டறிந்துள்ளது. எனவே உடல் இயக்கம் என்பது நம் வாழ்வின் இன்றியமையாத பகுதி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பது அவசியமல்ல. அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களில் ஆண்கள் அனைவரும் வெளியில் சென்று கடுமையாக உழைப்பவர்களாகவும், பெண்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்பவராகவும் இருந்தனர். 

ஆனால் தற்போதைய நவீன உலகம் காரணமாக மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் இயந்திரங்களே செய்து வருகின்றன. இது தான் பிரச்சனைகளின் ஆரம்பமே. எனவே முடிந்த வரை வேலைகளை நீங்களே செய்யப் பாருங்கள். ஆரோக்கியத்தை சரியான முறையில் பேணுங்கள்!

Views: - 20

0

0