முகத்தில் பருக்கள் இருக்கா? சீரகம், கொத்தமல்லி…. | பருக்களைப் போக்க எளிமையான வீட்டு வைத்திய முறை
Author: Hemalatha Ramkumar10 August 2021, 5:22 pm
முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உண்டு. ஹார்மோன் மாற்றல், சுற்றுச்சூழல் மாசுபாடு, எடுத்துக்கொள்ளும் உணவுகளை என பல காரணங்கள் காரணமாக ஏற்படக்கூடும். இதனை சமாளிக்க செயற்கை முறையில் தயார் செய்யப்பட்டு கடையில் விற்கப்படும் கிரீம்களைத் தான் வாங்கி பூச வேண்டும் என்பதில்லை.
எளிமையான பாரம்பரிய வீடு வைத்திய முறையின் மூலமும் அதை குணப்படுத்த முடியும். அப்படி பாரம்பரியமாக பின்பற்றும் ஒரு எளிய வீடு வைத்திய முறை குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
செரிமான கோளாறு காரணமாக ஏற்படும் முகப்பரு பிரச்சினையைப் போக்க உங்களுக்கு இந்த வெட்டு வைத்திய முறை உதவியாக இருக்கும்.
இந்த வீட்டு வைத்திய முறை சிறந்த செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், இது உடலில் உள்ள நச்சுகளை அகற்றவும் உதவியாக இருக்கும் மற்றும் பருக்கள் இல்லாத சருமம் பெற உதவியாக இருக்கும்
முதலில் இதற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்:
- சீரகம் விதைகள்: 1 தேக்கரண்டி.
- கொத்தமல்லி விதைகள்: 1 தேக்கரண்டி
- கருப்பு உப்பு: 1 தேக்கரண்டி
- ஓமம்: 1 தேக்கரண்டி
- பெருங்காயம்: கொஞ்சம்
- சுக்கு தூள்: 1 தேக்கரண்டி.
- மாதுளம் பொடி: 1 தேக்கரண்டி.
மேற்சொன்ன பொருட்களை சரியான அளவுகளில் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வர உங்கள் செரிமான கோளாறு காரணமாக ஏற்படும் முகப்பரு பிரச்சினைகள் எல்லாம் மாயமாக மறைந்து போகும்.
முகப்பருக்களை போக்க வீட்டு முறைப்படி ஃபேஸ்பேக்
சருமத்தில் உள்ள முகப்பருக்களைப் போக்கி சருமத்திற்கு சிறந்த பலன்களை வழங்க இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்யுங்கள்:
தேவையான பொருட்கள்:
சிவப்பு சந்தன தூள்: 1 தேக்கரண்டி
நெய்: தேக்கரண்டி
முல்தானி மிட்டி: 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்: தேக்கரண்டி
தேன்: தேக்கரண்டி
செய்முறை:
மேற்சொன்ன பொருட்களை எல்லாம் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இதன் ஸ்கின் பேக் போல உங்கள் சருமத்தில் தடவிக்கொள்ள வேண்டும். அதை அப்படியே உலரவிட்டு கழுவி விடுங்கள். ஒரு துண்டு கொண்டு அதை துடைக்க வேண்டாம். சருமம் தண்ணீரை உறிஞ்ச அனுமதிக்கவும். சிறந்த முடிவுகளுக்கு இதை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.
0
0