அதிகப்படியான வெள்ளைப்படுதலை குணமாக்கும் மகத்தான வாழைப்பூ சாறு!!!

2 February 2021, 7:21 pm
Quick Share

வெள்ளைப்படும் பிரச்சினை பெரும்பாலான பெண்களுக்கு பொதுவானது என்றாலும் அது ஒரு சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். மாதவிடாய் காலத்திற்கு முன்பு ஏற்படும் வெள்ளைப்படுதல் ஒரு சில பெண்களுக்கு துர்நாற்றம் மிகுந்ததாகவும், வித்தியாசமான நிறத்திலும், அடர்த்தியாகவும் காணப்படும். இது போன்ற வெள்ளைப்படுதல் ஏற்படும் போது அதனை சரி செய்யும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். இதனை குணப்படுத்த நாம் வீட்டில் செய்யக்கூடிய சில வைத்தியங்கள் உள்ளன. அவை என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். 

வெள்ளைப்படுதலுக்கான உணவு முறை:

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ- 15

கசகசா- 1/4 தேக்கரண்டி

வெந்தயம்- 1/2 தேக்கரண்டி

பிஞ்சு கடுக்காய்- 1/4

வாழைப்பூவை ஆய்ந்து அதிலுள்ள நரம்பை நீக்கி விட்டு பூவை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெந்தயம் மற்றும் கடுக்காய் ஆகிய இரண்டையும் சுத்தம் செய்து ஒரு உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். அடுத்து கசகசாவையும் பொடித்து கொள்ளுங்கள். இந்த மூன்று பொருட்களோடு சேர்த்து வாழைப்பூவையும் அரைத்து கொள்ளவும். உரலில் இடிக்க கஷ்டமாக இருந்தால் மிக்ஸி ஜாரில் போட்டு கூட நீங்கள் அரைத்து கொள்ளலாம். 

இந்த சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 25 மில்லி அளவு பருக வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் குடித்து வந்தாலே வெள்ளைப்படுதல் குணமாகி விடும். ஆனால் இதனை மாதக்கணக்கிலோ அல்லது வாரக்கணக்கிலோ குடித்து வர கூடாது. போதுமான இடைவெளி எடுத்து கொள்ள வேண்டும். 

வாழைப்பூ:

நோய் தீர்க்கும் பல பூக்களில் ஒன்று வாழைப்பூ. சர்க்கரை நோய், உடல் சூடு மற்றும் மூலம் ஆகியவற்றிற்கு இது ஒரு அருமருந்து. பெண்களின் கர்பப்பையை வலுப்படுத்தும் ஒரு அருந்தோழன் என்று இதனை சொல்லலாம். அதிக இரத்த போக்கு மற்றும் சூதக வலியை குறைக்க இது பெரிதும் உதவும். அதிக வெள்ளைப்படுதல் இருக்கும் பெண்கள் வாழைப்பூவை சரியாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் சரியாகும். ஏனெனில் வெள்ளைப்படுதலை கட்டுக்குள் வைக்க வாழைப்பூ நன்கு உதவும்.

வெந்தயம்:

உடலுக்கு குளுமை தரக்கூடிய வெந்தயம் அதிகப்படியான வெள்ளைப்படுதலை குறைக்க உதவுகிறது. பெண் உறுப்பின் pH அளவை சீராக வைக்க வெந்தயம் அறியப்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து அதனை காலையில் சாப்பிடும் போது மாதவிடாய் சம்மந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். மேலும்  வெள்ளைப்படுதலில் இருக்கும் துர்நாற்றத்தை போக்கும். வெந்தயத்தை முளைக்கட்டி எடுத்து வந்தால் அதன் பலன் அதிகரிக்கும். 

பிஞ்சு கடுக்காய்:

வாழைப்பூவைப் போன்றே கடுக்காயும் துவர்ப்பு சுவை கொண்டது. இரத்த விரித்திக்கு பெரிதும் கைக்கொடுக்கும். வெள்ளைப்படுதல் ஒரு சில பெண்களுக்கு அரிப்பு மற்றும் புண் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனை சரி செய்யக்கூடிய தன்மை கடுக்காய்க்கு உண்டு. எப்போதும் கடுக்காயில் உள்ள விதைகளை நீக்கி தான் அதனை பயன்படுத்த வேண்டும். வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு பிஞ்சு கடுக்காய் சிறந்தது. 

கசகசா:

பெண்களின் ஃபாலோப்பியன் குழாய்கழளை வலுவடைய செய்து கருவுறுதலை அதிகரிக்கும் தன்மை கசகசாவிற்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழாய்களில் இருக்கும் அடைப்புகளை நீக்கி கர்ப்பம் தரிக்க உதவி புரிகிறது. ஃபாலோப்பியன் குழாய்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கருவுறாமல் இருந்த பெண்கள் கசகசா நீரை அருந்தி கர்ப்பம் தரித்துள்ளனர். கசகசாவுடன் தேங்காய்ப்பால் கலந்து குடித்து வர வெள்ளைப்படுதல் குணமாகும். 

மேலே கூறப்பட்டுள்ள இயற்கை பொருட்கள் கொண்டு வெள்ளைப்படுதலை எளிதில் சமாளித்து விடலாம். நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள்.

Views: - 0

0

0