வெண்டைக்காயை இந்த மாதிரி சாப்பிட்டால் தீராத நோயும் தீருமாம்!!!

Author: Hemalatha Ramkumar
12 March 2023, 4:06 pm

ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் வெண்டைக்காய் ஒன்று. வெண்டைக்காயை பின்வரும் முறையில் சாப்பிடுவது எக்கச்சக்கமான நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. வெண்டைக்காயை எந்த மாதிரி உண்டால், என்ன மாதிரியான நோய்கள் குணமாகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இதற்கு ஒரு முழு வெண்டைக்காயை எடுத்து உப்பு கலந்த தண்ணீரில் அலசிக் கொள்ளவும். வெண்டைக்காயின் மேல் மற்றும் கீழ் பகுதியை வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் வெண்டைக்காயை நீள வாக்கில் இரண்டு துண்டாக வெட்டி கொள்ளவும்.

இப்போது ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் வெட்டி வைத்த இந்த வெண்டைக்காயை போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். வெண்டைக்காய் ஊறிய இந்த தண்ணீரை காலை வெறும் வயிற்றில் பருகவும். இந்த வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பது பின்வரும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.
*வெள்ளைப்படுதல்
*ஆஸ்துமா
*நாள்பட்ட சளி
*இருமல்
*சிறுநீர் எரிச்சல்
*சர்க்கரை நோய்

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அமைவது மட்டும் அல்லாமல், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இத்தகைய நன்மை வாய்ந்த வெண்டைக்காய் நீரை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?