பால் திரிந்து போய் விட்டதா… அந்த தண்ணீரை மட்டும் கீழே ஊற்றி விடாதீர்கள்!!!!

30 June 2020, 12:04 pm
Quick Share

பொதுவாக பால் திரிந்து போகும் போது, ​அது புளிப்பாகி போவதால், பின்னர் பன்னீர் தயாரிக்க பயன்படுகிறது. இந்த பன்னீர் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.  ஏனெனில் அதன் பதப்படுத்தப்படாத தன்மை மற்றும் அது வீட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. ஆனால், திரிந்த பாலின் திடமான பகுதியை வெளியே எடுக்கும்போது எஞ்சியிருக்கும் தண்ணீரை நீங்கள் என்ன செய்வீர்கள்? 

பெரும்பாலான மக்கள் அதை தூக்கி எறிந்துவிடுகிறார்கள், ஏனென்றால் அதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதைச் செய்வதற்குப் பதிலாக, அந்த நீரை பயன்படுத்த பல சுலபமான வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்த நீரை ஆங்கிலத்தில் வே வாட்டர் (Whey water) என்று அழைப்பார்கள். இதில்  ஏகப்பட்ட சத்துக்கள் உண்டு. இந்த நீரை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்….

◆மாவு பிசைவதற்கு:

பொதுவாக, நாம் சப்பாத்தி செய்ய மாவை பிசையும்போது சாதாரண தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்போது, ​​வழக்கமான தண்ணீரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, திரிந்த பாலில் இருந்து வரும் தண்ணீரை பிசைந்து கொள்ள பயன்படுத்தலாம். இந்த வழியில், நீங்கள் ஒரு ஊட்டச்சத்து நோக்கத்திற்காக தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள். மேலும், இந்த திரிந்த பால் நீரானது சப்பாத்தியை  வழக்கத்தை விட மென்மையாக்கும்.

◆காய்கறிகளை சமைக்கும்போது:

குழம்பு செய்யும் போது நாம் பொதுவாக தண்ணீரை தான் பயன்படுத்துவோம். உங்கள் குடும்பத்தின்  ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு சமைக்கும்போது, ​​காய்கறிகளை இந்த திரிந்த பால் நீர் கொண்டு வேக வையுங்கள். இந்த நீர் உணவுக்கு ஒரு குறிப்பிட்ட சத்தினை சேர்க்கும். மேலும் இது மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பயறு மற்றும் பருப்பு வகைகளை வேக வைக்கும் போது நீங்கள் இந்த  தண்ணீரைப் பயன்படுத்தலாம். இது உங்கள் உணவை சுவையாக மாற்றும்.

◆அரிசி வேக வைக்க:

பால் திரியும் போது அதிலிருந்து போதுமான அளவு தண்ணீர் நமக்கு கிடைக்கும். அதை அரிசி வேக வைக்க  பயன்படுத்தவும். போதுமான அளவு இல்லையென்றால், அதில் சிறிது சாதாரண தண்ணீரை சேர்க்கவும். மீண்டும், இது அரிசியின் சுவையை அதிகரிக்கும் மற்றும் புரதங்கள் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்கும். அரிசியைத் தவிர, நூடுல்ஸை வேகவைக்கவும் இந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

அடுத்த முறை இந்த  தண்ணீரை நிராகரிக்க நினைக்கும் போது, ​​இந்த விஷயங்களை நினைவில்  கொள்ளுங்கள். பால் திரிந்து போகும் போது, ​​அதை தேவையற்றது என்று நீங்கள் நினைக்காமல் அதனை பயனுள்ளதாக மாற்றுங்கள். முன்னர் குறிப்பிட்டபடி, இது உங்கள் உணவில்  அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக புரதங்கள் மற்றும் தாதுக்களை சேர்க்கும். இது உங்கள் தசைகளை வலிமையாக்க பெரிதும் உதவும்.