மூட்டுவலி பிரச்சினைக்கு குட்-பை சொல்ல இந்த கிழங்கு சூப் குடிச்சு பாருங்க! Mudavattukaal kizhangu benefits

Author: Dhivagar
26 June 2021, 1:37 pm
mudavattukaal kizhangu benefits in tamil
Quick Share

மூட்டுவலி பிரச்சினை இருந்தால் ஆட்டுக்கால் சூப் வைத்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் சைவ பிரியர்கள் பலருக்கும்  அசைவம் சற்று பிடிக்காத ஒன்று. ஆனால் அவர்களுக்காகவே இயற்கை தந்த ஒரு வரம் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு என்று சொல்லலாம். ஆட்டுக்கால் சூப் பிடிக்காதவர்களுக்காகவே அதே டேஸ்டில் சைவ முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்கிறது. 

இந்த முடவாட்டுக்கால் கிழங்கு என்பது ஒரு தாவர வகையைச் சார்ந்தது. பெரும்பாலும் மலைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. மலைக்காடுகளில் உள்ள பாறைகளிலும் மேட்டுப்பாங்களான பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதற்கு வேர்கள் கிடையாது. இதற்கு வேர் என்பதே இதன் கிழங்கு தான். இது வளரக்கூடிய பாறை பகுதிகளில் இருக்கக்கூடிய தங்கம், செம்பு, இரும்பு, கால்சியம் மற்றும் சிலிக்கா போன்றவற்றின் சத்துக்களை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது. வாதம், பித்தம், கபம் போன்ற பிரச்சினைகளையெல்லாம் குணப்படுத்த சித்தர்கள் இதை ஒரு மண்டலம் சாப்பிட பரிந்துரைப்பதாகவும் சொல்வதுண்டு.

இந்த கிழங்கின் விலை ஒரு கிலோ 300 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி வைத்தால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இப்போது இந்த முடவாட்டுக்கால் கிழங்கில் எப்படி சூப் வைப்பது என்பதை பார்க்கலாம்.

இதற்கு முதலில் முடவாட்டுக்கால் ஒரு 250 கிராம், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மிளகு, கசகசா, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி, இலவங்கப்பட்டை, பூண்டு, நல்லெண்ணெய், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் முடவாட்டுக்கால் உடன் இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்த மசாலாவைச் சேர்க்கவும், ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு இறக்கி விடவும். இறக்கியதும் உப்பு மற்றும் மிளகு போட்டு சூப் ஆக குடிக்கலாம்.

இதை தொடர்ந்து இரண்டு வாரங்கள் குடித்து வந்தால் மூட்டுவலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, தசைபிடிப்புக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதோடு கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமாகும். 

நாள்பட்ட மூட்டு வலி, இளம் வயதினருக்கு ஏற்படும் மூட்டு வலி, உடல் வலி, அசதி, களைப்பு போன்ற உங்கள் எல்லா கவலைகளையும் தீர்க்க இயற்கை அருளிய வரம் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு. இதை நீங்களும் பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொள்கிறோம். இந்த கிழங்கு tredyfoods.com போன்ற வளைத்தலங்களில் கூட வாங்க கிடைக்கிறது. நேரடியாக வாங்க வேண்டுமென்றால், ஊரடங்குக்கு பிறகு கொல்லிமலைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால் நேரிலேயே சென்று வாங்கலாம்.

Views: - 1232

3

0