மலச்சிக்கல் பிரச்சினை தீர இயற்கையான வீட்டு வைத்தியங்கள் | Constipation Home Remedies

21 July 2021, 4:23 pm
Natural Home Remedies for Constipation
Quick Share

மலச்சிக்கல் பிரச்சினை பல காரணங்களால் ஏற்படக்கூடும். ஆனால், இதை நாம் எளிமையாக வீட்டு வைத்தியம் மூலமே குணப்படுத்த முடியும்.

புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது ஃபாஸ்ட்புட் என ஆரோக்கியமே இல்லாத உணவை அதிகமாக உட்கொள்வது ஆகியவை மலச்சிக்கல் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் ஆகும். மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலே மிகவும் அசௌகரியமாக, சங்கடமான உணர்வு ஏற்படும் அல்லது மலத்தை எளிதில் வெளியேற்ற இயலாது. சில நேரங்களில், இது உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் மற்றும் மன அமைதிக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

வயதானவர்களுக்கு அதிகமாக இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இந்த மலச்சிக்கல் பிரச்சினையை எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெரியாமல் பலரும் மாத்திரை எல்லாம் சாப்பிட்டு பயனில்லாமல் தவிக்கின்றனர். ஆனால் எளிமையான சில வீட்டு வைத்தியங்கள் மூலம் மலச்சிக்கலை பிரச்சினையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அடுத் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றும் போது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமலும் பாதுகாப்பாக இருக்கலாம்.

அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்

மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடலில் ஏற்படும் நீரிழப்பு. எனவே, நீரிழப்பை எவ்வாறு தவிர்ப்பது? அதிகமாக நீராகாரங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் தான். இது மலச்சிக்கலுக்கான எளிய இயற்கை வைத்தியம் ஆகும். தினமும் உடல் செயல்பட தேவையான அளவுக்கு போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்

உங்கள் உணவில் நார்ச்சத்து இருப்பது ரொம்பவும் முக்கியம். மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் இருக்க நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கரையாத நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது உங்கள் குடல் இயக்கங்களின் நிலைத்தன்மையையும் அதிகரிக்கும். இதனால் உங்கள் செரிமான அமைப்பைக் கடந்து உணவு எளிதாக சென்றுவிடும். இதனால் மலச்சிக்கல் பிரச்சினையும் ஏற்படாது. பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள் போன்ற நல்ல ஆரோக்கியமான நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

அத்திப்பழம் 

அத்திப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அந்நீரோடு  சாப்பிட்டால் உடனடியாக மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அத்திப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளடக்கம் இருப்பதால் இது மிகவும் ஏற்ற ஒரு இயற்கை மருத்துவ முறையாக பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினைக்கும் அத்தி ஒரு சிறந்த வீட்டு மருத்துவமாக இருக்கும். 

பால் மற்றும் நெய்

பால் மற்றும் நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியவை. அதே நேரத்தில், மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபட சிறந்த பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகவும் செயல்படுகின்றன. நீங்கள் ஒரு கப் சூடான பாலில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய்யைச் சேர்த்து படுக்கைக்கு செல்லும் நேரத்தில் சாப்பிடலாம். மலச்சிக்கலில் இருந்து விடுபட இது மிகவும் பயனுள்ள மற்றும் இயற்கையான வழிகளில் ஒன்றாக கூறப்படுகிறது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது உங்கள் செரிமான அமைப்பைத் தூண்ட உதவுகிறது மற்றும் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். எனவே மலச்சிக்கல் பிரச்சினையை போக்க இது மிகவும் உதவியாக இருக்கும். இயற்கையான முறையில் மலச்சிக்கல் பிரச்சினைக்குத் தீர்வுப் பெற எலுமிச்சை நீர் உதவியாக இருக்கும். நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து எலுமிச்சை சாற்றை பிழிந்து தினமும் காலையில் குடிக்கலாம். மேலும், உங்கள் தேநீரில் எலுமிச்சை சேர்ப்பது மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வீட்டு சிகிச்சையாகும், மேலும் இது நீண்டகால செரிமானத்தையும் மேம்படுத்தும்.

Views: - 177

0

0

Leave a Reply