இரவில் தூக்கம் வரவில்லையா…??? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்!!!

25 March 2020, 5:15 pm
woman-sleeping updatenews360
Quick Share

தூக்கமின்மை என்பது உங்களை பல பிரச்சனைகளில் கொண்டு சேர்த்து விடும். உங்களின் இயல்பான வாழ்க்கையை அது சிதைத்து விடும். சரியான உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே போல போதுமான அளவு தூக்கம் இருந்தால் மட்டுமே உடல் சரியாக இயங்கும். கவனிக்கும் திறன் குறைவு, உடல் எடை அதிகரிப்பு, ஞாபக சக்தி குறைவு, எதிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் இருத்தல், செரிமான பிரச்சனை, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தூக்கமின்மையால் ஏற்படும்.

ஒரு சில அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே சரியான நேரத்தில் சட்டென்று தூங்கி விடுவார்கள். பலருக்கு தூக்கம் வராமல் எதையாவது ஒன்று செய்து இரவை கழிப்பார்கள். ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை இரவில் பெறலாம். அந்த மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

★தரமான படுக்கை:

“மெத்தை வாங்கினேன் தூக்கத்த வாங்கல” என்ற பாட்டை அனைவரும் கேட்டு இருப்பீர்கள். உங்களுக்கு எங்கு படுத்தால் தூக்கம் வருமோ அங்கு படுத்து உறங்குங்கள். விலை உயர்ந்த மெத்தையில் தான் படுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் உங்கள் படுக்கையை தரமானதாக அமைத்து கொண்டால் தூக்கம் நன்றாக வரும். உங்கள் படுக்கையை தினமும் சுத்தம் செய்யுங்கள். படுக்கை மேல் ஒரு போர்வை அல்லது ஏதேனும் துணியை விரித்து பிறகு படுத்துக் கொள்ளுங்கள். நேஷனல் ஸ்லீப் ஃபௌன்டேஷன் (National Sleep Foundation) கூறுவதுபடி தரமான படுக்கையில் உறங்குபவர்களுக்கு உறக்கம் நன்றாக கிடைக்கும்.

★படுத்து உறங்கும் அறையின் முக்கியத்துவம்:

நீங்கள் படுத்து உறங்கும் அறையை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே சிதறி கிடக்காமல் ஒழுங்காக அவற்றை அதன் இடங்களில் வையுங்கள். சுத்தமான மெத்தை, தலையணை மற்றும் போர்வை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். சுத்தமாக மற்றும் ஒழுங்காக இருக்கும் அறைகளில் படுத்து உறங்கும் போது மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கும்.

★தொலைக்காட்சியை மூடி விடுங்கள்:

படுக்கைக்கு செல்லும் போது கண்டிப்பாக தொலைக்காட்சியை அணைத்து விட வேண்டும். நீங்கள் படுக்கும் அறையில் தொலைக்காட்சி இருந்தால் அதனை அவசியம் ஒரு துணி போட்டு மூடி வைத்து விடுங்கள். சிறிது நேரம் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று நினைப்போம். பிறகு அந்த நேரம் அதிகமாகி கொண்டே சென்று உங்கள் தூக்கத்தை அது பாழ்படுத்தி விடும்.

★போனை படுக்கும் அறைக்கு வெளியே வையுங்கள்:

மொபைலை நோண்டிக் கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது. எனவே உங்கள் போனை நீங்கள் படுக்கும் அறைக்கு வெளியே வைத்து விடுவது நல்லது.

Leave a Reply