காலை உணவை உண்ண கஷ்டப்படுறீங்களா? இதை சாப்பிடுங்க நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்!

14 February 2020, 9:48 am
food updatenews360
Quick Share

காலையில்   பெரும்பாலானோருக்கு   உணவு உண்பது கடுமையான   விஷயமாக இருக்கும். இட்லி, தோசை   மற்றும் சாதம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால்   நன்மை தான். ஆனால் சிலருக்கு வயிறு நிறைய உணவு  உண்டால் வேலை செய்வதில் சிரமத்தை தர வாய்ப்புள்ளது.  ஆனால் நமக்கு காலையில் எடுத்துக் கொள்ளும் உணவே, நாள்   முழுக்க நன்றாக வேலை செய்ய ஊட்டச்சத்துக்களை தருகின்றது.  இதற்கு மாற்றாக எளிமையான எந்த விதமான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை  உண்ணலாம் என்பது பற்றி இதில் காணலாம்.

food updatenews360

அசைவ  உணவுப் பிரியர்கள்  காலை வேளைகளில் முட்டைகளை  உண்ண எடுத்துக் கொள்ளலாம். காலை நேரங்களில்  உணவு உண்பதை காட்டிலும் முட்டைகளை நீங்கள்  எடுத்துக்கொள்ளலாம். காரணம் இவை புரதச் சத்து நிறைந்தது. இது  கல்லீரலுக்கு நன்மை தரும் உணவாகும்.

தயிர்  குடிக்கலாம், இதில்  அதிகம் புரதச் சத்து நிறைந்தது. அதுமட்டுமில்லாமல்  உங்கள் உடல்எடையை குறைக்க வல்லது. குடலுக்கு சிறந்த நன்மையை  தரும். குடலில் உள்ள புண்களை ஆறச்செய்யும்.

food updatenews360

பெரும்பாலான  மக்கள் ஓட்ஸ்  உண்பதை விரும்புகிறார்கள். இதில்  நார்ச்சத்து உள்ளதால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை  தர வல்லது. உடலில் உள்ள கொலஸ்டாராலின் அளவை குறைக்க  வல்லது. இதை உண்பதன் மூலம் நமக்கு வயிறு நிறைந்த உணர்வுகிடைக்க  செய்யும். அதுமட்டுமில்லாமல் இருதய பிரச்சனை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை  குறைக்க வல்லது. 

food updatenews360

பாதாம் மற்றும் பிஸ்தா   போன்றவற்றை 2 ஸ்பூன் அளவிற்கு   எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள்வயிற்றை  நிரம்ப செய்துவிடும்

food updatenews360

கிரீன்- டீ -யை  நீங்கள் காலை வேளைகளில்  குடிக்கலாம், இதை குடித்தால்  உங்கள் உடலில் உள்ள கொழுப்பு சத்துக்கள்  குறைந்துவிடும்.

food updatenews360

பழங்களை காலை  உணவாக எடுத்துக்கொண்டால்  உற்சாகமாகவும், நாள் முழுக்க பிரஷ்-ஆக  இருக்கலாம். இவற்றை உண்பதன் மூலம்  மூளை  மற்றும்  நரம்பு மண்டலங்கள்  வலுவாக இருக்கும்.

food updatenews360