கழுத்து மட்டும் கருப்பா அசிங்கமா இருக்கா… கவலைய விடுங்க…இத டிரை பண்ணுங்க!!!
30 January 2021, 8:14 pmஒரு சிலருக்கு முகம் வெள்ளையாக இருக்கும். ஆனால் கழுத்து பகுதி முழுவதும் கரு கருவென காணப்படும். இது ஒரு வித தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். இது அலர்ஜி காரணமாக ஏற்படலாம் அல்லது உடலை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் போனாலும் கருமை உண்டாகும். இதனை எப்படி போக்குவது என்ற கவலை உங்களுக்கு இருந்தால் அதற்கான தீர்வுகள் இதோ…
●கற்றாழை:
கற்றாழை மடல் ஒன்றை எடுத்து அதிலுள்ள ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும். இதனை கருமையான கழுத்து பகுதியில் தினமும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வரும்போது விரைவில் கருமை மங்கும்.
●ஆப்பிள் சைடர் வினிகர்:
ஒரு காட்டன் பஞ்சு எடுத்து அதில் ஆப்பிள் சைடர் வினிகரை நனைத்து கொள்ளுங்கள். கழுத்து முழுவதும் தடவி உலர வையுங்கள். இதனை அடிக்கடி செய்து வர வேண்டும்.
●பாதாம் எண்ணெய்:
இரவு படுக்கைக்கு போகும் முன்பு பாதாம் எண்ணெயை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்யவும். இதனை இப்படியே விட்டு விட்டு காலை எழுந்தவுடன் ஒரு துணியால் துடைத்து விட்டு சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வர பலன் கிடைக்கும்.
●தயிர்:
கழுத்து பகுதி சுற்றிலும் கெட்டியான வீட்டில் செய்த தயிரை தடவவும். இருபது நிமிடங்கள் இதனை அப்படியே விட்டு விட்டு கழுவவும். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
●உருளைக்கிழங்கு:
கருமையை போக்குவதில் உருளைக்கிழங்கு சாறு பெரிதும் உதவுகிறது. உருளைக்கிழங்கை சீவி அதிலுள்ள சாற்றை பிழிந்து எடுத்து கொள்ளுங்கள். இதனை கருமையாக இருக்கும் இடத்தில் தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளலாம்.
0
0