மாதுளைப்பழம்: என்னதான் கொஞ்சம் விலை அதிகமென்றாலும் இதை சாப்பிடாமல் இருக்கக்கூடாது! ஏன் தெரியுமா?

Author: Dhivagar
23 August 2021, 11:26 am
Pomegranate Health Benefits, Uses, and More
Quick Share

மார்க்கெட்டுக்கு சென்று மாதுளம் பழத்தின் விலையைக் கேட்டாலே தலையே சுற்றி விடும் போல இருக்கிறது. இருந்தாலும் அதன் நன்மைகளை எண்ணிப் பார்க்கையில் என்ன விலைக்கொடுத்தலும் மதிப்பு என்று உங்களுக்கே தெரியும். அப்படியா? அப்படி என்ன நம்மையெல்லாம் இதில் இருக்கிறது? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க

மாதுளையின் 10 ஆரோக்கிய நன்மைகள்

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

மாதுளை ஜூஸ் வழக்கமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். இது குறிப்பாக நாட்பட்ட இரத்த அழுத்த மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் பண்புகள்

மாதுளை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். மேலும், மாதுளையின் மருத்துவ குணங்கள் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதைத் தடுக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது

இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் நாட்பட்ட அழற்சியிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். மாதுளையில் உள்ள புனிகலஜின் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். அனைத்து ஆக்ஸிஜனேற்றிகளும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இவை செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.

மூட்டுவலிக்கு தீர்வு தர உதவுகிறது

ஆர்த்திரிடிஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு மூட்டு வலி பொதுவானது. மாதுளையின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குணப்படுத்த உதவுகின்றன. மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நொதிகளைத் தடுப்பதில் மாதுளை உதவும் என்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆர்த்திரிடிஸ் பிரச்சினைக்கு திறம்பட சிகிச்சையளிக்க உதவும்.

ஆரோக்கியமான இதய செயல்பாட்டுக்கு உதவும்

மாதுளை இதயத்திற்கு உகந்த பழங்களில் ஒன்றாகும். மாதுளையின் புனிசிக் அமிலம் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். இது இதய நோய்களிடம் இருந்து இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மாதுளை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோயாளிகளை ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.

கொழுப்பைக் குறைக்கும்

மாதுளை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது. 

பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்கு தடுப்பு

மாதுளை சில வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மாதுளையில் உள்ள சக்திவாய்ந்த தாவர கலவைகள் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடும். இந்த பண்புகள் ஜின்ஜிவிடிஸ் மற்றும் பல்வலி ஸ்டோமாடிடிஸ் போன்ற வாய்வழி தொற்றுகளைத் தடுக்க உதவும்.

விறைப்புத்தன்மையை குணப்படுத்தும்

மாதுளம் பழம் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் விறைப்புத்திறன் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நினைவாற்றல் மேம்பாடு

நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ள வயதானவர்கள் மாதுளை ஜூஸ் தவறாமல் குடித்துவரநினைவாற்றல் நன்றாக மேம்படும்.

Views: - 364

0

0