வேகமாக உடல் எடை குறைய சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்!

13 May 2021, 8:22 am
quick weight loss recipes
Quick Share

கொரோனா பரவ தொடங்கி ஊரடங்கு போட ஆரம்பித்ததிலிருந்து பலரும் தங்கள் வீட்டிலிருந்தே வேலைச்  செய்ய துவங்கியுள்ளனர். இதனால் கொரோனா பயத்தோடு உடல் எடையும் கூடிவிட்டது. இதனால் கவலையும் பலருக்கும் அதிகமாகிவிட்டது. எனவே, உடல் எடையை வேகமாக குறைக்க என்னென்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ளலாம் என்று பலரும் தேடி வருகின்றனர். நீங்களும் அதுபோன்ற ஒரு தீர்வை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு உதவவே இந்த பதிவு.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் கார்ப்ஸ் மற்றும் ஃபைபர் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன. இதனால் ஆரோக்கியமான எடை இழப்புக்கு இது ஏற்ற உணவாக பார்க்கப்படுகிறது. இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இது விரைவாக உடல் எடை குறையாக பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஆப்பிள்

எடை இழப்புக்கு ஆப்பிள் மிகவும் ஏற்ற உணவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இது கார்ப்ஸில் நிறைந்துள்ளது மற்றும் 86 சதவீத தண்ணீரைக் கொண்டுள்ளது. ஆப்பிள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதிலுள்ள நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸ் கார்ப்ஸின் மற்றொரு வளமான ஆதாரம். காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக்கொள்வது எடை இழப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும். வேண்டுமென்றால் ஓட்ஸ் உடனே இயற்கை சர்க்கரையைப் பயன்படுத்தலாம். இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.

பழுப்பு அரிசி

வெள்ளை அரிசி சாப்பிடுவதை விட பழுப்பு அரிசி சாப்பிட்டால் விரைவாக எடை குறையும் என்று கூறப்படுகிறது. பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கோதுமை உணவுகள்

கோதுமை கார்ப்ஸின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். கோதுமை ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுகள் உடல் எடையைக் குறைக்கவும், தொப்பைக் கொழுப்பை குறைக்கவும் உதவும்.

Views: - 272

0

0