ஆண்களின் வழுக்கைக்கு காரணங்கள் இதுதான்! இனிமேலும் இதை செய்யாதீங்க

10 July 2021, 10:47 am
reasons for baldness in males
Quick Share

ஆண்கள் பலருக்கும், நரை முடி முடி உதிர்வு, வழுக்கை என்பவை எல்லாம் மிகப்பெரிய பிரச்சினைகள் என்று சொல்லலாம். இந்த முடி பிரச்சினைக்கு தீர்வு காண பல செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்தி பயன்படுத்தி சலித்து போயிருப்பார்கள். ஆனால் நிரந்தர பலன் ஒன்றும் கிடைத்திருக்காது. ஆனால், பொதுவாக பெரும்பாலோனோர் இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வதில்லை. இதனால் முடி உதிர்ந்து வழுக்கையே ஆகிவிடும்.

முதலில் இந்த வழுக்கை ஏற்படக் காரணமாக இருக்கும் 6 காரணங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். முதலில் காரணங்களை தெரிந்து கொண்டலாலே அதற்கான தீர்வும் கிடைத்துவிடும். சரி, இப்போது வழுக்கை ஏற்படுவதற்கான காரணத்தைத் தெரிந்துக்கொள்ளலாம்.

அதிக நேரம் சூரிய ஒளியில் நிற்பதால் உச்சந்தலைப் பாதிப்படையும். சூரிய ஒளி நல்லதுதானே வைட்டமின் D சத்து கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நீண்ட நேரம் வெயிலில் நிற்பதால் தலையெல்லாம் வியர்த்துப் போய், தலையே பிசு பிசு வென ஆகிவிடும். இதனால் முடியின் வேர்க்கால்கள் சேதமடைந்து முடி உதிர்வுக்கு காரணமாகிறது.

இதனால் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய தேவை இருந்தால் பருத்தி துணி, தொப்பி போன்றவற்றை அணிந்து வெயிலில் இருந்து தலையை மறைத்துக்கொள்ளலாம். இதனால் சூரிய ஒளி நேரடியாக தலையில் விழாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

அதே போல சிலர் தலைமுடி சாஃப்ட் மற்றும் ஷைனிங் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளுமே ரசாயனம் கலந்த ஷேம்பூக்களை பயன்படுத்துகின்றனர்.  இதனால் தலை முடி மெலிந்து பலவீனமடையும். அதோடு சேதமடையும். முடிந்தவரை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இயற்கை பொருட்களான அரப்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

அதே நரை முடி இருக்கிறதென ஹேர் டை, ஹேர் ஜெல், ஹேர் ஜெல் போன்ற கெமிக்கல் பொருட்களை எல்லாம் அடிக்கடி பயன்படுத்தினாலும் முடி உதிர்வு ஏற்படும். அது போன்ற செயற்கை பொருட்களில் இருக்கும் ரசாயனங்கள் உங்கள் உச்சந்தலையைச் சேதப்படுத்தி முடி உதிர்வை ஏற்படுத்தும். இதற்கு தீர்வாக, நீங்கள் வாங்கும் பொருட்களிலேயே இருக்கும் கால அளவு முடியும் வரை அதை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இளநரை பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த காரணம் புகைப்பழக்கம்  தான். புகைப்பிடிப்பதால் ஆக்சிஜன் அளவு பாதிப்படையும் அதோடு முடி வேர்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் பாதிப்படையும். எனவே அடர்த்தியான வழுக்கை இல்லாத தலைமுடி வேண்டும் என்றால், முடிந்தவரை புகைப்பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்தி விடுவது நல்லது.

வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படக்கூடும். இதனால் தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்படக்கூடும். எனவே முடிந்தவரை, வேலைப்பளு அதிகம் இருந்தாலும் உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்ளாமல் சரியான நேரத்துக்கு தூங்குவது உங்களுக்கு மன அழுத்தம் இன்று ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும், உங்களை ஆரோக்கியமாகவும் இருக்க செய்யும்.

நாவில் நுழையாத பெயர்களுடன் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் துரித நவீன உணவுகளைச் சாப்பிடுவதாலும் வழுக்கை பிரச்சினை ஏற்படக்கூடும். அதுதவிர நல்ல உணவுகளை ஆரோக்கியமான அளவில் சாப்பிட வேண்டும். இயற்கையான பால், கீரை, காய்கள், முட்டை, பழ வகைகளை அளவோடு உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

Views: - 282

0

0