கர்ப்பம் தவிர மாதவிடாய் தள்ளி போக வேறென்ன காரணங்கள் இருக்க முடியும்???

Author: Hemalatha Ramkumar
30 November 2022, 2:16 pm

தோராயமாக உங்கள் மாதவிடாய் எப்போது வரும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அது குறிப்பிட்ட தேதியில் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? மாதவிடாய் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு சுழற்சியில் வருகிறது. மேலும் அவை பிடிப்புகள், முதுகுவலி மற்றும் வீக்கம் போன்ற பல மோசமான விஷயங்களைக் கொண்டு வருகின்றன. இருப்பினும், இத்தகைய வலி மிகுந்த மாதவிடாய் வராமல் போவதும் பிரச்சினை தான். பொதுவாக மாதவிடாயை தவர விடுவது கர்ப்பத்தை குறிக்கும். எனினும், கர்ப்பம் அல்லாமல் மாதவிடாய் வராமல் இருக்க என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை இப்போது பார்க்கலாம்.

மன அழுத்தம்:
உங்களுக்கு மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம். மன அழுத்தம் உடலில் நிறைய மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது மற்றும் மன அழுத்தம் உங்கள் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கலாம். நீங்கள் நீண்ட காலமாக எதையாவது நினைத்து கொண்டிருந்தால், அதன் காரணமாக உங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

PCOS:
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது கருமுட்டை வெளி வராத ஒரு நிலை ஆகும். பெண்களுக்கு ஏற்படும் இந்த ஹார்மோன் கோளாறு கருப்பையை பாதிக்கிறது மற்றும் அவர்களால் கருமுட்டைகளை வெளியிட முடியாது. இதுவும் நீங்கள் மாதவிடாய் தவறியதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கருத்தடை மாத்திரைகள்:
கருத்தடை மாத்திரைகள் உண்மையில் ஓரளவிற்கு தீங்கு விளைவிக்கும். அவை உங்களுக்கு கருமுட்டை வெளிவருவதைத் தடுக்கிறது. மேலும் இது உங்களுக்கு மாதவிடாய் வராததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சில பெண்களுக்கு இந்த மாத்திரைகளை உட்கொண்ட பிறகு சாதாரண மாதவிடாய் வந்தாலும், வேறு சிலருக்கு இது எதிர்மறையாக பாதித்து மாதவிடாய் வராமல் போகிறது.

தீவிர உடற்பயிற்சிகள்:
நீங்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவராக இருந்து, நீண்ட காலமாக அதை மிகத் தீவிரமாகச் செய்து வருகிறீர்கள் என்றால், அது உங்கள் மாதவிடாயை இழக்க ஒரு காரணமாக இருக்கலாம். தங்கள் உடலுக்கு தொடர்ந்து தீவிர வேலை கொடுப்பவர்கள் இந்த எதிர்கொள்கின்றனர். மேலும் இது உங்கள் உடலால் அதை எடுத்துக்கொள்ளும் திறன் இல்லை என்பதையும், அதற்கு சிறிது நேரம் ஓய்வு தேவை என்பதையும் இது குறிக்கலாம்.

எடை அதிகரிப்பு அல்லது இழப்பு:
உங்கள் மாதவிடாயை இழப்பதற்கான மற்றொரு அசாதாரண காரணம், அதிகப்படியாக எடை அதிகரிப்பது அல்லது அதிகப்படியாக இழப்பது. எடையில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் உடலின் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?