ஏங்க இந்த குறட்டை வருது? குறட்டை வராம இருக்க என்னதான் வழி?

Author: Dhivagar
27 July 2021, 5:59 pm
Remedies That Will Stop Snoring
Quick Share

மக்கள் ஏன் குறட்டை விடுகிறார்கள்?

நீங்கள் குறட்டை விடுகிறீர்கள் என்றால் அது ஒன்றும் பெரிய தவறல்ல. ஏனென்றால் உலகில் பெரும்பாலான மக்கள் குறட்டை விடுகிறார்கள். உங்கள் தூக்கத்தில் சுவாசிக்கும்போது உங்கள் தொண்டை வழியாக காற்று பாயும் போது குறட்டை ஏற்படுகிறது. இதனால் உங்கள் தொண்டையில் உள்ள தளர்வான திசுக்கள் அதிர்வுறுவதன் காரணமாக குறட்டை ஒலிகள் உண்டாகிறது.

குறட்டை உங்கள் தூக்கத்தை அல்லது சில சமயம் உங்களுடன் உறங்குபவர்களின் தூக்கத்தைக் கெடுக்கக்கூடும். இது உங்களுக்கு பெரிய தொந்தரவு கொடுக்காவிட்டாலும், இதை கொஞ்சம் கவனம் எடுத்து பார்ப்பது நல்லது. ஏனென்றால், குறட்டை ஒரு கடுமையான சுகாதார நிலைக்கான அறிகுறியாகவும் கூட இருக்கலாம், அவற்றுள்:

  • காற்றுப்பாதைகள் அடைப்பு
  • உடல் பருமன்
  • உங்கள் வாய், மூக்கு அல்லது தொண்டையின் கட்டமைப்பில் சிக்கல்
  • தூக்கமின்மை 

போன்ற பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

நீங்கள் நிமிர்ந்து படுத்து தூங்குவதனாலோ அல்லது தூங்குவதற்கு முன் மது அருந்துவதனாலோ குறட்டை ஏற்படலாம்.

சரி குறட்டைப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? 

தொடர்ந்து குறட்டை இருக்கும் சந்தர்ப்பங்களில், தேவையான மருத்துவ சிகிச்சையையும் மருத்துவரின் ஆலோசனையையும் பெறுவது முக்கியம்.

தூக்க நிலை ஏற்படும் குறட்டைப் பிரச்சினைகளை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்துவிட முடியும்.

இந்த பதிவில் குறட்டை ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களையும் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 15 தீர்வுகளைப் பற்றியும் பார்க்கலாம்:

1. அதிக எடையுடன் இருந்தால் எடையைக் குறைக்கவும்.

உடல் எடையைக் குறைப்பதன் மூலம் உங்களுக்கு குறட்டை ஏற்படுத்தும் தொண்டையில் உள்ள திசுக்களின் அளவைக் குறைக்க முடியும். குறைவாக மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த எடை அளவைக் குறைக்கலாம். தினமும் வழக்கமாக உடற்பயிற்சி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதவிக்கு உங்கள் மருத்துவரை அல்லது ஊட்டச்சத்து நிபுணரையும் நீங்கள் அணுகலாம்.

2. நிமிர்ந்து படுப்பத்தைத் தவிருங்கள்

உங்கள் முதுகு தரையில் இருக்கும்படி நிமிர்ந்துப் படுத்து தூங்குவதன் காரணமாக சில நேரங்களில் நாக்கு தொண்டையின் பின்புறத்திற்கு நகரும், இது உங்கள் தொண்டை வழியாக காற்றின் ஓட்டத்தை தடுக்கக்கூடும். எனவே ஒரு பக்கமா சாய்ந்து தூங்குவதால் எளிதான காற்றோட்டத்துக்கு வசதியாக இருக்கும் என்பதால் உங்கள் குறட்டை பிரச்சினை தீரக்கூடும்.

3. உங்கள் படுக்கையின் தலைப்பகுதியை உயர்த்துங்கள்.

உங்கள் படுக்கையின் தலைபகுதியை நான்கு அங்குலங்கள் உயர்த்துவதன் மூலம் உங்கள் காற்றுப்பாதைகள் நன்கு திறந்து இருக்கும் என்பதால் உங்களுக்கு குறட்டை ஏற்படும் பிரச்சினை இருக்காது.

4. நாசல் டைலேட்டர் பயன்படுத்துங்கள்.

மூக்கின் சுவாச பாதை நன்கு திறந்து இருக்க ஸ்டிக்-ஆன் நாசல் ஸ்ட்ரிப்ஸ் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தலாம், இது நாசி பாதையில் இடத்தை அதிகரிக்க உதவும். இது உங்கள் சுவாசத்தை மிகவும் எளிதாக்குகிறது மற்றும் உங்கள் குறட்டையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

5. நாள்பட்ட ஒவ்வாமைகளுக்கு சிகிச்சை பெறுங்கள்

ஒவ்வாமை உங்கள் மூக்கு வழியாக காற்று ஓட்டத்தை குறைக்கும், இது உங்கள் வாய் வழியாக சுவாசிக்க உங்களை கட்டாயப்படுத்தும். இதனால் நீங்கள் குறட்டை விடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எந்த வகையான ஒவ்வாமை மருந்துகள் உங்கள் நிலையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து சிகிச்சைப் பெறுவது நல்லது.

6. உங்கள் மூக்கின் அமைப்பு

சிலருக்கு பிறப்பிலேயே ஒரு வித்தியாசமான மூக்கு அமைப்பு இருக்கும், இது காற்றோட்டத்தை கட்டுப்படுத்தக்கூடும். இதனால் தூக்கத்தின் போது வாய் வழியே சுவாசம் ஏற்படும் என்பதால் குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த நிலையை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம். இதுகுறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

7. படுக்கைக்கு முன் மதுவை தவிர்க்கவும்.

நீங்கள் படுக்கைக்கு செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக மது அருந்தக்கூடாது. மது உங்கள் தொண்டை தசையை தளர்த்தி, குறட்டை ஏற்படுத்தும்.

8. படுக்கைக்கு முன் தூக்க மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

படுக்கைக்குச் செல்வதற்கு முன் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொளவதை நிறுத்தினால் உங்களுக்கு குறட்டைப் பிரச்சினை இருக்காது. இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

9. புகைப்பதை நிறுத்துங்கள்.

புகைபிடிப்பது ஆரோக்கியமற்ற பழக்கமாகும், இது உங்கள் குறட்டையை மோசமாக்கும். இதற்கான சிகிச்சைகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து இந்த பழக்கத்தை நிறுத்தி விட முயற்சி செய்யுங்கள்.

10. போதுமான தூக்கம் வேண்டும்

ஒவ்வொரு இரவும் உங்களுக்கு ஏழு முதல் எட்டு மணிநேர தூக்கம் கட்டாயம் தேவை. தினமும் இரவில் சரியாக தூங்கினால் உங்களுக்கு குறட்டைப் பிரச்சினை இருக்காது.

Views: - 252

0

0