உடல் எடையைக் குறைக்க ஆர்வமாக இருப்பவரா நீங்கள்? இதையும் தெரிஞ்சிக்கோங்க!

7 June 2021, 8:37 am
roasted chana for weight loss
Quick Share

எல்லோருக்குமே கட்டுக்கோப்பாக உடல் எடையைப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உடல் எடையை குறைக்க பலர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். அதுவும், குறிப்பாக இந்த ஊரடங்கு சமயத்தில் உடல் பருமன் பிரச்சினை ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

எல்லோரும் வெவ்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டாலும் எல்லோரும் அதனால் பயனடைவதில்லை. உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு மற்றும் உணவு தேர்வு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். நீங்களும் உங்கள் உடல் எடையைக் குறைக்க எளிதான வழியை தேடுகிறீர்கள் என்றால் உங்கள் அன்றாட உணவில் தவறாமல் கொண்டைக்கடலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உடல் எடைக் குறைவதோடு மட்டுமல்லாமல், செரிமான அமைப்பும் சீராக செயல்படும். கொண்டைக்கடலையில் அதிக புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் இருப்பதால் இது ஒரு சிறந்த உணவாக உள்ளது. கொண்டைக்கடலையை எந்த வேளையிலும் அளவோடு உட்கொள்ளலாம். 

 • கொண்டைக்கடலைக் குறைந்த கலோரிகளை கொண்ட ஒரு உணவு. 
 • கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் பசியைக் கட்டுப்படுத்தி உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும். 
 • மேலும், இது நீண்ட நேரம் பசி உணர்வைத் தணிப்பதால் உடல் எடையைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கிறது. 
 • அதேபோல வேகவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால்  அதிலிருக்கும் புரதம் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
 • கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தியாமின், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளது. 
 • தாதுக்கள் நிறைந்து இருப்பதால் உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும். 
 • கொண்டைக்கடலை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லது. 
 • கொண்டைக்கடலை இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதோடு இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து, அதிக புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
 • இரத்த சோகை பிரச்சினை உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சுண்டல் ஒரு ஏற்ற ஆரோக்கியமான உணவு. 
 • இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டைக்கடலை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சினையில் இருந்து விரைவில் வெளியேறிவிடலாம். 
 • கொண்டைக்கடலை Hormone Imbalance என்று சொல்லக்கூடிய ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளையும் போக்குகிறது.
 • பெண்களுக்கு  ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. 
 • மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கும் ஏற்படும் மனநிலை மாற்றங்களை சரிசெய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
 • தினமும் நீங்கள் 100 கிராம் கொண்டைக்கடலை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல வலு கிடைக்கும். சாப்பிட்ட பிறகு நன்கு செரிமானம் ஆக குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

Views: - 338

1

0