சாம்பார் சும்மா டேட்ஸ்டுக்காக மட்டும் இல்லங்க… செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை எவ்வளவோ நல்லது இருக்கு!

Author: Dhivagar
29 July 2021, 11:11 am
Sambar Health Benefits
Quick Share

உண்மையில் இந்திய உணவுகள் சுவைக்கானவை மட்டுமல்ல சுகாதாரமானவையும் கூட தான். நம் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு வகைகள் உண்டு. வட இந்தியாவில் கோதுமை வகையிலான உணவுகள் பிரபலம் என்பதை போல் தென்னிந்தியாவில் மெது வடை, இட்லி, தோசை, ஊத்தப்பம், சாம்பார், சட்னி போன்ற அரிசி மற்றும் பருப்பு வகை உணவுகள் மிகவும் பிரபலம். சொல்லப்போனால் தென்னிந்தியாவில் மட்டுமல்ல அவை உலகளவில் பிரபலமானவை என்று சொல்லலாம். 

இருப்பினும், இவற்றுள் சாம்பார் எனும் உணவு வகையின் அற்புதமான நன்மைகளைப் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம். இந்த சாம்பார் மிகவும் சத்தான மற்றும் பல்வேறு காய்கறிகளுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த சாம்பாரில் நமக்குப் பிடித்தவாறு அந்தந்த காலநிலையில் கிடைக்கும் காய்கறிகளை நாம் சேர்த்துக்கொள்ளலாம். இந்த சாம்பார் சீரான செரிமானத்திற்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியையும் அடைய உதவும் ஒரு மாமருந்து என்று சொல்லலாம்.

இந்த சாம்பார் துவரம் பருப்பு கொண்டு சமைக்கப்படும் ஒரு உணவு ஆகும். இதனுடன் காய்கறிகளான கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கேரட் மற்றும் சுரைக்காய் போன்ற பல்வேறு விதமான காய்கறிகள் சேர்க்கப்படும். இட்லி, தோசை அல்லது சாதத்துடன் இந்த சாம்பார் அவ்வளவு ருசியாக இருக்கும். சாம்பாரில் பருப்பு வகைகள் இருப்பதால் புரதச்சத்து நிறைந்த உணவு இது. எனவே, அசைவு உணவு பிடிக்காதவர்களுக்கு இந்த சைவ உணவு புரதச்சத்துக்கான ஆதரமாக உள்ளது.

சாம்பரின் சுகாதார நன்மைகள்

இந்த சாம்பாரில் பருப்பு மற்றும் பல்வேறு காய்கறிகளால் சேர்க்கப்படுவதால் இதில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கொண்டால், நீண்ட நேரம் பசியில்லா உணர்வு இருக்கும். ஒரு திருப்தி உணர்வு கிடைக்கும். இதன் மூலம் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க முடியும்.

உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய வைட்டமின்கள், தாதுக்களான இரும்பு, துத்தநாகம், ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆகியவற்றில் சாம்பாரில் அதிகம் உள்ளது. சாம்பாரில் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மிளகு மற்றும் கடுகு ஆகியவை சேர்க்கபடுவதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்க உதவியாக இருக்கும்.

புகழ்பெற்ற இந்த தென்னிந்திய உணவு செரிமான செயல்முறை சீராக செயல்பட உதவியாக இருக்கும், ஏனெனில் இவை நார்ச்சத்துக்களால் நிறைந்துள்ளது. மேலும் இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாது, அதேசமயம் சாம்பாரின் சிறந்த நீர் உள்ளடக்கம் குடல் சுவர்கள் வழியாக மலத்தை எளிதில் கடக்க உதவுகிறது.

சாம்பார் உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலுக்கு ஆரோக்கியமான மசாலாப் பொருட்களின் கலவையைக் கொண்டுள்ளது.

இந்த சுவையான தென்னிந்திய உணவு குறைவான கிளைசெமிக் குறியீட்டையே கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் கூட இந்த சாம்பாரை அளவோடு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராக இயங்கும். உடல் பாகங்களும் சீராக இயங்க உதவியாக இருக்கும்.

Views: - 285

0

0