எச்சரிக்கை…அடிக்கடி சுய இன்பம் காண்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் இவைதான்!
27 January 2021, 4:58 pmசுயஇன்பம் காணுதல் என்பது முற்றிலும் ஆரோக்கியமான ஒன்றுதான். உண்மையில், இது நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரவல்லது. ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல், அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காணுதலும் ஆபத்து தான்!
நீங்கள் அதிகமாக சுயஇன்பம் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராமல் இருந்திருந்தால் அதற்கான பத்து அறிகுறிகளை இங்கே பார்க்கலாம்!
1. முதன்மையான அறிகுறி என்னவென்றால், நீங்கள் உங்களையே காயப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு சுயஇன்பம் காண்பதுதான். ஒரே நாளில் பல முறை நீங்கள் சுயஇன்பம் காணும் போது நீங்கள் சோர்வாகிவிடுவீர்கள் மற்றும் உங்கள் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் ஏற்படக்கூடும்.
2. நீங்கள் ஏற்கனவே சுயஇன்பம் செய்திருந்தாலும், மீண்டும் மீண்டும் அதற்கான தேவையை உணர்கிறீர்கள் என்றால் நீங்கள் அதிகம் சுயஇன்பம் காண்கிறீர்கள் என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
3. உங்கள் துணையுடன் இருந்தும், திருப்தி அடையாமல் சுயஇன்பம் காணவே ஆர்வம் காட்டுகிறீர்கள் என்றால், அதிகப்படியான சுய இன்ப வேட்கையைத் தவிர்க்க மருத்துவரை மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
4. உடலுறவில் ஈடுபடுட்ட பிறகும் நீங்கள் சுயஇன்பம் கண்டால், உங்கள் உடலுக்கு விந்தணுக்களை மீண்டும் நிரப்புவதற்கு போதுமான நேரத்தை நீங்கள் கொடுக்க முடியாது. இதனால் பாலியல் ரீதியான குறைபாடுகள் ஏற்படலாம்.
5. நீங்கள் பாலியல் உறவில் துணையுடன் பல முறை உடலுறவு வைத்துக்கொண்ட பிறகும் திருப்தி அடையவில்லை என்றால் நீங்கள் கையை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கான அறிகுறி தான் இது.
6. அதிகப்படியான சுயஇன்பம் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இப்போது, முடி உதிர்தலுக்கான ஒரே காரணம் இது மட்டுமல்ல என்பதிலும் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், ஆனால் திடீரென முடி உதிர்வதை நீங்கள் கவனித்திருந்தால், சுயஇன்பத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
7. சுயஇன்பம் இல்லாமல் உங்களால் ஒரு நாள் கூட இருக்க முடியாமல், நீங்கள் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், சுயஇன்பம் காணுதல், உங்கள் கைவேலை அதிகமாகிவிட்டது என்பதற்கான அறிகுறி.
இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் சுயஇன்பம் காணுதலை குறைத்துவிடுவது நல்லது. உங்களால் உங்கள் வேட்கையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
0
0