என்ன கீரையில் ரசம் செய்யலாமா, புதுசா இருக்கே ! ட்ரை பண்ணுங்க தோழிகளே!

14 February 2020, 11:05 am
keerai updatenews360
Quick Share

குழந்தைகளுக்கு   சத்தான உணவு கொடுப்பது   அவசியமாகும். அதிலும் அவர்கள்  சரிவிகித உணவை உண்ண வேண்டும். அப்பொழுதுதான்   நாள் முழுக்க சந்தோசமாகவும், சுறுசுறுப்பாகவும்   அவர்களால் விளையாட முடியும்.

பொதுவாக   குழந்தைகள்   மிகுந்த சுவை  உள்ள உணவுகளை மட்டுமே  உண்பார்கள். அதிலும் நொறுக்குத்தீனிகள்   என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சத்தான  உணவுகள் உண்பதை காட்டிலும், அவர்கள் காரமாகவும், மொறுமொறு  என்று இருக்கும் உணவையே விரும்புவார்கள். ஆனால் தின்பண்டங்கள்  உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. அதிகமாக உண்டால் உடல் எடை, வியாதிகள்   சின்ன வயதிலே வந்து அவதிக்கு உள்ளவர்கள். இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். காரமாக, சுவையாக  கீரை ரசம் செய்து கொடுங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக உண்பார்கள்.

தேவையானவை:

சிறு  கீரை- அரைக்கட்டு, 

பருப்பு  தண்ணீர்- 1 டம்ளர்,  

சீரகம், மஞ்சள்  தூள், மிளகு – தேவையான  அளவு.

உப்பு –  2 ஸ்பூன்.

செய்முறை:

 •  சிறுகீரையை  நன்றாக பொடிப்பொடியாக   நறுக்கிக் கொள்ள வேண்டும்.
 • பின்பு  அதனுடன் சீரகத்தை   சேர்த்து, தண்ணீர் ஊற்றி   கொதிக்க வைக்க வேண்டும்.
 • நன்கு   கொதித்த பின்பு, அதனுடன்  பருப்பு தண்ணீரை ஊற்றி சூடாக்க  வேண்டும். மிளகை தூளாக நொறுக்கிக்  கொள்ளலாம். 
 • இதை  கொதிக்கும்   கீரை நீரில்   போடவும், பின்பு   மஞ்சள் தூள் சிறிதளவு  சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால்   மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
 • இந்த நீரை  நன்கு கொதிக்க  வைத்த பின்பு, ஆற வைத்து   குழந்தைகளுக்கு தரலாம். சுவையான  கீரை ரசத்தை அவர்கள் விரும்பி உண்பார்கள். தினமும்   வேண்டும் என கேட்பார்கள்.
 • 6 மாத  குழந்தை   முதல் அனைத்து  வயது குழந்தையினருக்கும் இதைக்  கொடுக்கலாம். 

சிறு கீரையின்   நன்மைகள்:

 • மிளகு   சேர்த்து உண்பதால், குழந்தைகளை   சுறுசுறுப்பாக வைக்க செய்யும்.
 • நினைவாற்றலை   அதிகரிக்க செய்யும்.
 • பசியில்லாத   குழந்தைகளுக்கு, பசியை   உருவாக்க செய்யும்.
 • கல்லிரலில்  வரும் நோயை தடுக்க  செய்கின்றது
 • ரத்த சோகை  மற்றும் மலச்சிக்கல்  போன்ற பிரச்சனைகளை நீக்க  வல்லது