உங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட சில டிப்ஸ்!!!

17 April 2021, 8:53 pm
Quick Share

கடந்த தலைமுறையை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்றைய தலைமுறையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் குறைந்த நேரத்தை செலவிடுகிறார்கள்.   பெற்றோர்கள் வேலை மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையுடன் சிக்கிக் கொண்டு விட்டதால், ​​குழந்தைகள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கும், இணையத்தில் பயன்படுத்துவதற்கும் அல்லது சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கும்  நேரத்தை செலவிடுகிறார்கள். பெற்றோரின் குறைவான கவனத்தையும் அன்பையும் பெறுவதால் குழந்தையின் உணர்ச்சி மற்றும் மன நலன்  பாதிக்கப்படுகிறது.

பெற்றோர்கள் தங்கள் பிஸியான வேலைக்கு  மத்தியில் நேரத்தை எடுத்துக்கொண்டு, குழந்தைகளின்  தேவைகளை கேட்டு அவர்களுக்காக கவனம் செலுத்துவது முக்கியம். இதனை செய்ய நீங்கள்  வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்த வேண்டியிருக்கும். வீட்டில் உங்கள் குடும்ப நேரத்தை அதிகரிக்க 5 பயனுள்ள வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

1. வேலைகளை ஒன்றாகச் செய்யுங்கள்: 

வீட்டில் ஒரு குழுவை உருவாக்கி கொள்ளுங்கள். அதில் வீட்டின் ஒவ்வொரு உறுப்பினரும் தினசரி வீட்டு வேலைகளைச் செய்வதில் சமமாக ஈடுபட வேண்டும். நீங்கள் இதை ஒன்றிணைக்கலாம் அல்லது வேலைகளை தனித்தனியாக செய்யலாம். ஏனெனில் இது உங்கள் குழந்தைகளில் உள்ள பொறுப்பு உணர்வைத் தூண்டும்.

2. ஒன்றாக உணவை சாப்பிடுங்கள்:

தினமும் ஒரு வேலையாவது ​​நீங்கள் ஒரு குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து ஒரு உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஒரு சோர்வான நாளுக்கு பிறகு குறைந்தது இரவு உணவையாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட முயற்சி செய்யவும்.

3. உணவின் போது கண்டிப்பாக தொலைபேசிகள் பயன்படுத்த வேண்டாம்:

உணவின் போது, உங்கள் அருகில் ​​கண்டிப்பாக  தொலைபேசிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இது நீங்கள் அவர்களுடன் தொடர்புகொள்வதை உறுதிசெய்யும். மேலும் ஆன்லைனில் மெசேஜ்  அனுப்புவதற்கு பதிலாக உங்களுடன் உரையாட குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

4. யோகா:

உங்களுக்கு சௌகரியமான ஒரு நேரத்தை எடுத்து, அது அதிகாலையிலோ அல்லது மாலை நேரத்திலோ எதுவாக இருந்தாலும் உங்கள் குழந்தைகளுடன் யோகா செய்யலாம். இது அவர்களை மொபைல், லேப்டாப் பயன்படுத்துவதில்  இருந்து விலக்கி வைக்கும். இது ஒரு சிறப்பு பிணைப்பை உருவாக்க உதவும். 

5. வீட்டுப்பாடம் செய்ய அவர்களுக்கு உதவுங்கள்:

உங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால், அவர்கள்  வீட்டுப்பாடங்களை செய்ய அவர்களுக்கு உதவுங்கள். பாடம் பற்றிய கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள். அவர்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைப் பற்றி உரையாடுங்கள்.

Views: - 38

0

0