நீங்கள் உயரமாக வளர வேண்டுமா? இந்த ஆசனம் செய்யுங்கள், எளிதில் உயரமாகிவிடுவீர்கள்!

12 February 2020, 10:35 am
meditation- updatenews360
Quick Share

தினமும்   நீங்கள் யோகா   செய்தால் போதும், உங்கள்  உடல் ஆரோக்கியமாகவும், மனநிலை   நிம்மதியாவும் இருக்கும். யோகா   என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி, மனதை   ஒருநிலைபடுத்தி செய்யும் செயல்முறையாகும்.

யோகாவை   முறையான பயிற்சியில்   செய்து வந்தால் உடலில் உள்ள  தேவையற்ற கொழுப்புகள் குறையும். மன அழுத்தம்   குறைந்து ஆரோக்கியமான உடலை நீங்கள் பெறலாம். உடலில்  ரத்த ஓட்டம் சீராக நடக்கும்.

yoga updatenews360

தடாசனத்தின்   நன்மைகள்:

 • நீங்கள்  உயரமாக வளர வேண்டும் என்றால்   எந்த ஆசனம் செய்தால் 
 • போதுமானது. தடாசனம்  நின்று கொண்டு செய்யக்கூடிய  ஆசனம் என்று சொல்லலாம். தடா என்பது குன்று போல்  நிற்பதையே குறிக்கும். நீங்கள் மற்ற ஆசனங்கள் செய்யும்  முன் தடாசனம்செய்வது நல்லது.
 • கர்ப்பிணி  பெண்கள் முதல்   6 மாதங்கள் இந்த ஆசனம் செய்து  வந்தால் உடலுக்கும், மனதிற்கும்  நனமை தரும். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு   நியாபக சக்தி அதிகரிக்கும்.

தடாசனம்  செய்யும் முறை :

 • நன்கு  நேரான நிலை  கொண்டு நிற்க  வேண்டும். அடுத்ததாக  இரண்டு கால்களையும் ஒரு மாதிரி   சேர்த்து வைக்க வேண்டும்.
 • உங்களுடைய   கைகளை உடலின்  பக்கவாட்டில் அழுத்தம்  ஏற்படும் அளவிற்கு அழுத்தமாக வைக்கலாம். 
 • உங்களுடைய  முழங்கால்கள்  வளையாமல் நேராக  இருப்பது அவசியமாகும்.
 • இரண்டு   கைகளையும்    தலைக்கு மேல்   தூக்கி வைத்துக் கொண்டு, நமஸ்காரம்    செய்வது போல அமைத்துக் கொள்ளலாம்.
 • பின்பு  மூச்சை மெதுவாக   உள்ளிழுத்து, உங்கள்   குதி கால்களை மேலே சற்று   உயர்த்த வேண்டும்.
 • பின்பு   குதிகால்களை   கீழே இறக்கும்போது மூச்சை  விட வேண்டும். இரண்டு நொடிகளுக்கு   ஒரு முறை இதே போல் செய்யலாம்.
 • இம்முறையை  மூன்று, நான்கு  முறை திரும்ப, திரும்ப  செய்து பார்க்கலாம்.

ஆசனத்தின் பலன்கள்:

 • மனதுக்கு  அமைதியை நிலை  நாட்ட செய்கின்றது.
 • உடலுக்கு  ரத்தம் பாய்வது  சீராக நடைபெற்று, உடலில் உள்ள  தேவையற்ற கழிவுகள் நீங்கிவிடும்.
 • நமக்கு  சரியாகவும், நேராகவும்  நிற்கும் நிலையை இது கற்பிக்கின்றது.
 • கால்கள்  வலுவடையச்  செய்கின்றன.
 • உயர்  ரத்த அழுத்தம்  உடையவர்கள் இதை  தவிர்த்தல் நன்மை  பயக்கும்.
 • இதை  தொடர்ந்து  செய்வதால் உங்களுக்கு  காம உணர்வுகளை ஏற்படுத்தும் சக்தி  இந்த வகை ஆசனத்திற்கு உள்ளது.