ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு வேர்க்கடலை சாப்பிடலாம்…???

Author: Hemalatha Ramkumar
28 July 2022, 3:48 pm
Quick Share

பலரது விருப்பபான ஸ்நாக்ஸ் பட்டியலில் வேர்க்கடலை நிச்சயம் இருக்கும். ஆனால் அது பிடிக்கும் என்பதால் அதனை அதிகமாக சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை. ஏனெனில் இது சில அசௌகரியங்களுக்கு வழிவகுக்கும். வேர்க்கடலை ஆரோக்கியமான பருப்புகளில் ஒன்றாகும் என்றாலும், ஒரே நேரத்தில் அதிகமாக உட்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒரு நாளைக்கு எத்தனை வேர்க்கடலை சாப்பிடலாம், யார் யாரெல்லாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை வேர்க்கடலை சாப்பிடலாம்?
வேர்க்கடலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான கொழுப்பின் மூலமாகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் மெக்னீசியம், ஃபோலேட், தாமிரம் மற்றும் அர்ஜினைன் போன்ற கனிமங்கள் உள்ளன. அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், உணவில் தொடர்ந்து வேர்க்கடலை சாப்பிடுவது நன்மை பயக்கும். பர்பி, வேர்க்கடலை வெண்ணெய் போன்ற பல வடிவங்களில் இதை உணவில் சேர்க்கலாம் அல்லது வேர்க்கடலையை அப்படியே சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை போதுமானது. வேர்க்கடலை வெண்ணெயாக சாப்பிட்டால், ஒரு நாளைக்கு 2 டேபிள்ஸ்பூன் என்பது ஆரோக்கியமான பரிந்துரைக்கப்பட்ட வரம்பு. வேர்க்கடலை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் மாலை நேரமாகும். அதிகப்படியான வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்க்கலாம்.

இது தாது உறிஞ்சுதலைத் தடுக்கலாம்:
வேர்க்கடலை பாஸ்பரஸின் சிறந்த மூலமாகும். இது பைடிக் அமிலம் அல்லது பைடேட் வடிவத்தில் சேமிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிக பைடேட்டை உட்கொள்வது இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் மாங்கனீசு போன்ற பிற தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கலாம். காலப்போக்கில் இது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு கதவைத் திறக்கும்.

எடை அதிகரிப்பு:
நீங்கள் எடை இழக்க முயற்சிக்கிறீர்கள் என்றால்
வேர்க்கடலை மலிவானது மற்றும் ஆரோக்கியமானது. ஆனால் இது அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. உணவுக் கட்டுப்பாட்டின் போது அதிகப்படியான வேர்க்கடலையை உட்கொள்வது உங்கள் எடை இழப்பு திட்டத்தை சிதைத்து, எடை அதிகரிக்க வழிவகுக்கும். நீங்கள் டயட் செய்து கொண்டிருந்தால், ஒரு நாளைக்கு ஒரு பிடி வேர்க்கடலை போதுமானது. இது உங்களுக்கு 170 கலோரிகளை வழங்குவதோடு, நீண்ட நேரத்திற்கு உங்களை முழுதாக வைத்திருக்கும்.

இது வயிற்றுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்:
ஒரே நேரத்தில் அதிகமாக வேர்க்கடலை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவை வேர்க்கடலையை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள். எனவே, நீங்கள் ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், நிலக்கடலையை மிதமான அளவில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

வேர்க்கடலை அலர்ஜி குறித்து கவனமாக இருங்கள்:
வேர்க்கடலை ஒவ்வாமை மிகவும் பொதுவானது, குறிப்பாக குழந்தைகளிடையே. ஒரு சிறிய அளவு வேர்க்கடலை கூட சிலருக்கு எதிர்வினையைத் தூண்டலாம் மற்றும் பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்: மூக்கு ஒழுகுதல், தொண்டை மற்றும் வாயில் கூச்ச உணர்வு, தோல் பிரச்சினைகள், மூச்சுத் திணறல் மற்றும் செரிமான பிரச்சினைகள். இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். இல்லையெனில் அது ஆபத்தானதாக மாறும்.

Views: - 1348

0

0