ஒரு பைசா செலவில்லாமல் மூட்டு வலி, நரம்பு இழுத்தல், கால் வலி, பல் வலி ஆகிய அனைத்திற்கும் ஒரே இயற்கை தீர்வு…!!!

18 November 2020, 7:37 pm
Quick Share

என்ன தான் நம் முன்னோர்கள் அனுபவிக்காத பல தொழில்நுட்பங்களை நாம் அனுபவித்து வருவதாக பெருமை பீத்திக் கொண்டாலும் அவர்களிடம் இருந்த ஒரு முக்கியமான ஒன்று நம்மிடம் இன்று இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அது என்ன என்று யோசிக்காமலே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆமாம்… இப்போது நாம் பேசிக்கொண்டு இருப்பது ஆரோக்கியத்தை பற்றி தான். அந்த காலத்தில் சர்வ சாதாரணமாக நூறு வயது வரை எந்த வித பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்று அறுபது வயதை தாண்டினாலே அது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இது அனைத்திற்கும் இரண்டே விஷயங்கள் தான் காரணம். ஒன்று நம் உணவு முறை, மற்றொன்று நம் உடல் இயக்கம். 

உணவு பற்றி சொல்லவே வேண்டாம்… ஃபாஸ்ட் ஃபுட், ஜன்க் ஃபுட் என்று உடலின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் உணவு வகைகளையே நாம் விரும்புகிறோம். அடுத்ததாக  நாம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் இயந்திரங்களே செய்து விடுகிறது. இதன் காரணமாக நமது ஆரோக்கியம் கெட்டுப்போகிறது. கழுத்து வலி, மூட்டு வலி, கால் வலி, கால் இழுத்தல், நீரிழிவு நோய், ஆஸ்துமா என்று அடுக்கி கொண்டே போகும் அளவிற்கு பெயர் கூட வைக்கப்படாத பல நோய்கள் நம்மை தாக்குகின்றன. 

அதிலும் குறிப்பாக தற்போது யாரைக் கேட்டாலும் மூட்டு வலி, கழுத்து வலி இருப்பதாக கூறுகிறார்கள்.  மூட்டு வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. மூட்டுகளில் அடிப்பட்டாலோ, குறுத்தெலும்பு அல்லது தசைநார்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலோ மூட்டு வலி உண்டாகும். கீல்வாதம் இருந்தாலும் அது மூட்டு வலியை ஏற்படுத்தும். மூட்டு வலிக்கு பல அறிகுறிகள் உண்டு. 

மூட்டுகளில் தொட்டால் எப்போதும் சூடாக இருப்பது, விறைப்புத்தன்மை, சிவத்தல், வீக்கம், பலவீனமாக உணர்வது, மூட்டுகளில் வினோதமான சத்தம் கேட்பது, நினைத்த நேரத்தில் சட்டென்று கால்களை நீட்டி மடக்க முடியாமல் இருப்பது ஆகிய அறிகுறிகள் மூட்டு வலி இருப்பதை உறுதிப்படுத்தும். 

ஏதாவது விபத்தில் மூட்டுகளில் அடிப்படும்போது தசைநார்கள், குருத்தெலும்பு, மூட்டு இணைப்பு மற்றும் மூட்டுகளை சுற்றி உள்ள திரவம் என எதை வேண்டுமானாலும் பாதிக்கலாம். உடல் பருமனாக இருப்பதும் மூட்டு வலியை ஏற்படுத்தும். உடலின் எடை மூட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் போது அது கடுமையான மூட்டு வலியை உண்டாக்கும். 

சரி இனி இதற்கான சிகிச்சையைப் பற்றி பார்க்கலாம். மூட்டு வலி, நரம்பு இழுத்தல், கால் வலி, பல் வலி என அனைத்திற்கும் ஒரே தீர்வு ஒன்று உள்ளது. உங்கள் கால்களில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் விரல்களுக்கு இடையில் உள்ள புள்ளிக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த புள்ளிக்கு ST44 என்று பெயர். 

இதனை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் இரண்டு கால்களிலும் செய்யுங்கள். தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வந்தாலே உங்கள் வலி அனைத்தும் பறந்து போய்விடும். 

நரம்பு இழுத்தல் பிரச்சனைக்கு கால் மூட்டுக்கு பின்புறம் இருக்கும் இடத்தில் அழுத்த வேண்டும். இந்த புள்ளிக்கு பெயர் UB40. இதனை இடது காலில் மட்டும் செய்தாலே போதும். மருந்து, மாத்திரை என தேவையில்லாமல் செலவு செய்வதற்கு பதிலாக எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் எளிய முறையில் வீட்டிலே இதனை செய்து பலன் பெறலாம்.