குழந்தை குறையோடு பிறப்பதற்கான உண்மையான காரணங்கள்!!!

4 November 2020, 9:55 pm
Quick Share

திருமணமான தம்பதியினரை வாழ்த்தும் போது பெரியவர்கள் “பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறுவார்கள். இந்த பதினாறு வகையான செல்வங்களில் ஒன்று தான் குழந்தை செல்வம். அனைவருக்குமே தங்களுக்கு ஆரோக்கியமான, அழகான குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு குழந்தையானது மன வளர்ச்சி குன்றியதாகவோ அல்லது உடலில் ஊனத்துடனோ பிறந்து விடுகின்றன. இவ்வாறு பிறப்பதற்கு சில அடிப்படையான காரணங்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

★நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வது:

நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டால் குழந்தை குறையோடு தான் பிறக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது உண்மையில் மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்றால் மரபணு மூலமாக தங்கள் மூதாதையருக்கு இருந்த உடல்நலக்குறைவு குழந்தைகளுக்கு பெற்றோரால்  மாற்றப்படுகிறது. 

★ஊட்டச்சத்து குறைபாடு:

ஒரு பெண் கர்ப்பம் தரித்து அக்குழந்தையை ஈன்றெடுக்கும் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றில் முக்கியமான ஒன்று உணவு. கர்ப்பமாக இருக்கும் போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டால் தான் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும். உணவுகளில் கவனம் செலுத்தாமல் விட்டு விடும்போது குழந்தை ஏதாவது ஒரு குறையோடு பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். 

★மஞ்சள் காமாலை:

நாம் உண்ணும் உணவினை செரிமானம் செய்து அதிலுள்ள நச்சுகளை பிரித்தெடுக்கும் வேலையை கல்லீரல் செய்கின்றது. ஒரு சில சமயங்களில் அந்த  கல்லீரலே நச்சுகளால் பாதிக்கப்படும் போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது. கர்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு இந்நோய் ஏற்படும் பட்சத்தில் கருவில் உள்ள குழந்தையானது குறையோடு பிறக்கும். 

★நீரிழிவு நோய்:

அந்த காலத்தில் பணக்கார நோய் என்று வரையறுக்கப்பட்டு இருந்த சர்க்கரை வியாதி தற்போது பாகுபாடு காட்டாமல் அனைவரையும் தாக்கி வருகிறது. அதிலும் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு விட்டால் அது குழந்தையை பாதிக்க பெருமளவு வாய்ப்பு உள்ளது. 

★குறைப்பிரசவம்:

பத்து மாதம் தாயின் கருவில் இருந்து பிறக்கும் குழந்தை தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு வேலை பத்து மாதத்திற்கு முன்பே ஒரு குழந்தை பிறந்துவிடுமாயின் அது குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சியில் பின் தங்கிய நிலையோடு பிறக்கின்றன. 

★வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நிலை:

குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் போது அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவ்வப்போது ஸ்கேன் செய்து தெரிந்து வைத்து கொள்வது மிக முக்கியம். குழந்தையை தொப்புள் கொடி சுற்றி கொள்வது, குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பது போன்ற நிலைகள் மிகவும் ஆபத்தானவை. இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் கூட ஒரு வித குறையோடு பிறக்கின்றன.

Views: - 21

0

0